சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக்டவுன் 6.0: சென்னையில் அதிரடி- 2,000 வாகனங்கள் சீஸ்- 2,436 பேர் மீது கேஸ்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பரவுவதை தடுக்க மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட சென்னையில் கட்டுப்பாடுகளை மீறியதாக 2,000 வாகனங்கள் முதல் நாளிலேயே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களை விட இம்முறை லாக்டவுன் கடுமையாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

Lockdown 6.0: Chennai Police register 2,436 cases

இந்த நிலையில் சென்னை லாக்டவுன் நிலவரத்தை ஆய்வு செய்த சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

லாக்டவுன் அமலில் இருப்பதால் பொதுமக்கள் சிரமம் பார்க்காமல் நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும். சென்னையில் முதல் நாளில் வாகனப் போக்குவரத்து பெருமளவு குறைந்திருந்தது.

அதிரடியான பிளான்.. அடுத்த 12 நாட்கள் மிக முக்கியம்.. சென்னை லாக்டவுன் கொஞ்சம் வித்தியாசமானது ஏன்?அதிரடியான பிளான்.. அடுத்த 12 நாட்கள் மிக முக்கியம்.. சென்னை லாக்டவுன் கொஞ்சம் வித்தியாசமானது ஏன்?

Recommended Video

    Chennai Lockdown கொஞ்சம் வித்தியாசமானது ஏன்?..அதிரடி Plan

    லாக்டவுனின் முதல் நாளில் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதால் 2,346 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 2,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

    முக ககவசம் அணியாதவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 986 பேர் மீது முக கவசம் அணியாததால் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. வடசென்னை பகுதியில்தான் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தற்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் லாக்டவுன் முடிந்த பின்னர் ஜூலை 1-ந் தேதி முதல் வழங்கப்படும். இவ்வாறு கமிஷனர் விஸ்வநாதன் கூறினார்.

    English summary
    Chennai Police had registered 2,436 cases in First day of Lockdown 6.0.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X