சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்போ சீக்கிரமே லாக்டவுன் தளர்வுகளா? 20 நாட்களுக்கு பின் தமிழ்நாட்டில் செம மாற்றம்.. குட்நியூஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வந்த நிலையில் திடீரென தினசரி கேஸ்கள் கொஞ்சமாக சரிந்துள்ளது.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு பிறகு கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளன. ஆம் நேற்று தமிழ்நாட்டில் 23975 கேஸ்கள் பதிவானது.

பிக் பாஸ் தமிழ் 5: முதல்முறையாக பினாலே மேடையில் நடந்த அதிசயம்.. வாழ்த்தும் ரசிகர்கள் பிக் பாஸ் தமிழ் 5: முதல்முறையாக பினாலே மேடையில் நடந்த அதிசயம்.. வாழ்த்தும் ரசிகர்கள்

இது கடந்த சனிக்கிழமை பதிவான 23989 கேஸ்களை விட குறைவாகும். பொதுவாக கொரோனா கேஸ்கள் உச்சத்தை தொட்ட பின்தான் இப்படி கேஸ்கள் குறையும் அல்லது ஒரே அளவில் பதிவாகி வரும். தமிழ்நாட்டில் 20 நாட்களுக்கு பிறகு நேற்று முதல்முறையாக கேஸ்கள் குறைவாக பதிவாகி உள்ளது.

குறைந்த கேஸ்கள்

குறைந்த கேஸ்கள்

கொஞ்சம்தான் குறைந்துள்ளது என்றாலும் இது ஒரு வகையில் நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்னும் கேஸ்கள் குறையவில்லை. சென்னையில் 8987 பேருக்கு நேற்று பாதிப்பு ஏற்பட்டது .சென்னையில் கொரோனா பாசிடிவ் சதவிகிதம் 30 ஆக உள்ளது. அதாவது சென்னையில் நீங்கள் 1, 2, 3 என்று மூன்று நபர்களை வரிசையாக நிற்க வைத்து டெஸ்ட் செய்தால் அதில் ஒருவருக்கு கண்டிப்பாக கொரோனா இருக்கும்.

சென்னை கேஸ்கள்

சென்னை கேஸ்கள்

சென்னை உட்பட 18 மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் லேசாக உயர்ந்தாலும் மொத்த பாதிப்பு குறிப்பிடத்தகுந்த அளவிற்கு குறைந்து இருக்கிறது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 2701 , கோவையில் 1866 கேஸ்கள் பதிவாகி உள்ளன. கேஸ்கள் மாவட்ட அளவில் ஆங்காங்கே உயர்ந்தாலும் மொத்தமாக கொரோனா கேஸ்கள் இன்னும் தமிழ்நாட்டில் நேற்று குறைந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்கள் தற்போது 1.42 லட்சமாக உள்ளது.

மருத்துவமனை கொரோனா

மருத்துவமனை கொரோனா

ஆனால் மருத்துவமனையில் 8018 பேர் மட்டுமே இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லோரும் வீட்டிலும், சிலர் அரசு முகாமிலும் இருக்கிறார்கள். சென்னையில் 35 சதவிகித ஆக்சிஜன் இல்லாத பெட்கள் மட்டுமே இதுவரை நிரம்பி உள்ளது. மற்ற பெட்கள் இதுவரை நிரம்பவில்லை. எனவே கொரோனா கேஸ்கள் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு பதிவானாலும் மக்கள் மருத்துவமனைக்கு வருவது குறைந்துள்ளது. இது ஒருவகையில் நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது.

 பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

ஏனென்றால் பலி எண்ணிக்கை தினமும் 26க்கும் கீழாக பதிவாகிறது. தினசரி கேஸ்கள் 20 நாட்களுக்கு பின் குறைந்துள்ளது. தமிழ்நாடு இதனால் 3ம் அலை உச்சத்தை கடந்துவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அப்படி உச்சத்தை கடந்துவிட்டால் தமிழ்நாட்டில் விரைவில் லாக்டவுன் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று ஏற்பட்டது போல இன்னும் ஒரு வாரம் கொரோனா கேஸ்கள் குறையும் பட்சத்தில் தமிழ்நாட்டில் தளர்வுகள் கொண்டு வரப்பட வாய்ப்புகள் உள்ளன.

Recommended Video

    Tamilnadu Lockdown: increases fine for not wearing masks | OneIndia Tamil
    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ஆனால் பொங்கல் பண்டிகை காரணமாக மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பி உள்ளனர். இதனால் வரும் நாட்களில் கிராமங்களில் கேஸ்கள் உயரும் வாய்ப்புகளும் உள்ளன. நேற்றைய சரிவு ஒரு நாள் மட்டும் ஏற்பட்ட சரிவா.. இல்லை வரும் நாட்களிலும் இதேபோல் கேஸ்கள் குறையுமா என்பது போக போகத்தான் தெரியும். தினசரி கேஸ்கள் வரும் நாட்களில் குறையும் பட்சத்தில் தமிழ்நாட்டில் இரவு நேர லாக்டவுன் கட்டுப்பாடு அல்லது ஞாயிறு முழு கட்டுப்பாடு தளர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளன.

    English summary
    Lockdown: Tamilnadu may see ease down very soon as the Coronavirus cases see a dip in 20 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X