சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எஸ்.டி கொரியர் முதல் தேர்தல் பணிகள் வரை.. ஐயூஎம்எல் ராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ் கனி யார்?

Google Oneindia Tamil News

சென்னை: தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக இராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக எஸ்.டி. கொரியர் நிர்வாக இயக்குநர் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் லோக்சபா தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடும் என்று தற்போது அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. திமுக போட்டியிடும் 20 தொகுதிகள், மற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியை திமுக அளித்து இருக்கிறது.

Lok Sabha Elections 2019: Who is IUML Ramanathapuram candidate Nawas Kani? Here is the details

தற்போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் இதுகுறித்து அறிவித்துள்ளார். அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுகிறார்.

நவாஸ் கனி எஸ்.டி.கொரியர் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவர் ஏணி சின்னத்தில் போட்டியிட இருக்கிறார். இவர் கடந்த ஒரு மாதமாக அங்கு தேர்தல் பணிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணியில் முறையாக அறிவிக்கப்பட்ட முதல் வேட்பாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 EXCLUSIVE: மக்களின் உணர்வுகளை புரிந்தவன் நான்.. நிச்சயம் வெல்வேன்.. நவாஸ் கனி நம்பிக்கை! EXCLUSIVE: மக்களின் உணர்வுகளை புரிந்தவன் நான்.. நிச்சயம் வெல்வேன்.. நவாஸ் கனி நம்பிக்கை!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பில் இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பளராக எஸ்.டி. கொரியர் நிர்வாக இயக்குநர் கா. நவாஸ்கனி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

Lok Sabha Elections 2019: Who is IUML Ramanathapuram candidate Nawas Kani? Here is the details

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சாயல்குடி அருகில் உள்ள குருவாடி என்னும் ஊரில் காதர் மீரா கனி - ரம்ஜான் பீவி தம்பதியருக்கு 14.05.1979 மகனாக பிறந்தவர் கா. நவாஸ்கனி. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு படிப்படியாக உயர்ந்து நின்று எஸ்.டி. கூரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக விளங்குகின்றார்.

20.01.2011 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையமான சென்னை , காயிதே மில்லத் மன்ஸிலில் நடைபெற்ற "தி டைம்ஸ் ஆப் லீக்" என்ற ஆங்கில பத்திரிகை துவக்க விழாவில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் முன்னிலையில் கா. நவாஸ்கனி தனது 32 வது வயதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக்கொண்டார்.

2011ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழுவில் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை அறங்காவலராகவும் அதைத் தொடர்ந்து மாநில கௌரவ ஆலோசகராகவும் கடந்த 9 ஆண்டுகளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் சேவையாற்றி வருகின்றார்.

Lok Sabha Elections 2019: Who is IUML Ramanathapuram candidate Nawas Kani? Here is the details

சேவைகள்:

எஸ்.டி. கூரியர்ஸ் கல்வி அறக்கட்டளையின் மூலமாக வருடந்தோறும் தமிழகத்தில் படிக்க ஆர்வம் இருந்தும் பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் ஏழை மாணவர்களுக்கு 10, 12 ஆம் வகுப்புகள், கல்லூரியில் படிப்பவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதோடு அரசு படிப்பில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு ஊக்கத் தொகையும், இவர்களின் அண்ணலார் கல்வி அறக்கட்டளை மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வறக்கட்டளையின் மூலமாக பலநூறு பொறியியல் பட்டதாரிகள் உருவாகி வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவரணியான முஸ்லிம் மாணவர் பேரவை சேர்ந்தவர்கள் முழு வீச்சில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ள எஸ்.டி. கூரியர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை இராயபுரம் ரம்ஜான் மஹாலை இலவசமாக ஒரு மாத காலத்திற்கு வழங்கி அனைத்து நிலைகளிலும் உதவி புரிந்தனர். இதன் மூலம் பல்லாயிரம் மக்கள் பயனடைந்தனர்.

அதே போன்று கேரள மாநிலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது சுமார் 6 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் எஸ்.டி. கூரியர்ஸ் மூலமாக இலவசமாக கேரளாவுக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. கஜா புயலால் டெல்டா மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளான போது எஸ்.டி. கூரியர்ஸ் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் ஒருங்கிணைக்கப்பட்டு சேர்க்கப்பட்டதோடு தன்னார்வ தொண்டர்களும் நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நல்லிணக்கப் பணிகள்:

தமிழகத்தை தலைமையிடமாக உழைப்பையே மூலதனமாக கொண்டு துவங்கப்பட்ட எஸ்.டி. கூரியர்ஸ் நிறுவனங்கள் இன்று 1946 கிளைகளையும், 350 இணைப்பு மையங்களோடு விரிவடைந்து இந்நிறுவனத்தின் மூலம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் 13,000 (பதிமூன்றாயிரம்) துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளும், தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்நிறுவனம் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதிலும் கிளைகளை விரிவுபடுத்தி சாதனை படைக்கும் குறிக்கோளோடு செயல்பட்டு வருகின்றது.

Academy of Universal Global Peace பல்கலைக் கழகம் கே. நவாஸ்கனிக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. சமூக நல்லிணக்கம், கல்விப்பணி, சன்மார்க்க சேவையில் ஈடுபாடு கொண்டு சேவையாற்றி வரும் கே. நவாஸ்கனி அரசியல் பொது வாழ்விலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழிநின்று தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அன்பைப் பெற்று வருகிறார், என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

English summary
Lok Sabha Elections 2019: Who is Indian Union Muslim League Ramanathapuram candidate Nawas Kani? Here is the details.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X