சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிர வைத்த ஸ்வாதி.. காலேஜ் பீஸ் கட்ட பணம் இல்லை.. செல்போனை திருடி விற்றோம்.. கஞ்சா அடித்தோம்!

கல்லூரி கட்டணத்துக்காக திருடினோம் என்று பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    அரை மணி நேரத்தில் பிடிபட்ட செல்போன்: போலீசார் அதிரடி!

    சென்னை: "காலேஜ் பீஸ் கட்ட பணம் இல்லை.. அதான் திருடிட்டோம்" என்று சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட பெண் வாக்குமூலம் தந்துள்ளார்.

    நேற்று முன்தினம் பைக்கில் வந்த ஒரு ஜோடி, சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்தது. மின்னல் வேகத்தில் பைக் வந்து சென்றாலும், பின்னாடி உட்கார்ந்து செல்வது ஒரு இளம்பெண் என்பதை பார்த்து செல்போனை பறிகொடுத்தவர் அதிர்ந்து போனார்.

    போலீசில் இதை சொல்லவும்தான், சிசிடிவி காட்சியை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட ஜோடி.. காதல் ஜோடி என்பது முதல் தகவல். 29 வயதான ராஜு என்பவர், டாட்டூ குத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். காதலி பெயர் சுவாதி.. கரூரை சேர்ந்தவர்.. வயசு 20!

    கணவனின் காலை கட்டி.. கொதிக்கும் எண்ணெயை ஊற்றி.. மிளகாய் பொடி தூவி.. சுத்தியலால் அடித்த கொடூர மனைவிகணவனின் காலை கட்டி.. கொதிக்கும் எண்ணெயை ஊற்றி.. மிளகாய் பொடி தூவி.. சுத்தியலால் அடித்த கொடூர மனைவி

    சுவாதி

    சுவாதி

    பகலில் காலேஜ், சாயங்காலம் திருட்டு, இரவில் கஞ்சா.. இதுதான் சுவாதியின் வாழ்க்கை. சோஷியல் மீடியா மூலம்தான் எல்லா ஆண் நண்பர்களும் சுவாதிக்கு பழக்கமாகி இருக்கிறார்கள். இவர் அப்பா ஒரு பஸ் டிரைவராம். தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் விஸ்காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலமாகதான் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    கஞ்சா

    கஞ்சா

    நிறைய இடங்களில் இப்படி திருடி, அதைவைத்து கஞ்சா வாங்கி அடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். ராஜுதான் ஸ்வாதிக்கு கஞ்சா பழக்கத்தை கற்று கொடுத்துள்ளார். காலேஜ் ஹாஸ்டலில் ஸ்வாதி தங்கியிருந்தபோதே தண்ணி அடித்துள்ளார். இதனால் ஹாஸ்டலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அதனால் சைதாப்பேட்டையில் ஒரு ரூம் எடுத்து ராஜு, ஸ்வாதி தங்கி வந்துள்ளனர். அதாவது லிவிங் டூ கெதர்!

    கட்டணம்

    கட்டணம்

    சம்பவத்தன்று 18 ஆயிரம் ரூபாய் செல்போனை பறித்து, பர்மா பஜாரில் வெறும் 3 ஆயிரத்துக்கு விற்றுள்ளனர். அந்த காசில் கஞ்சா வாங்கி அடித்துவிட்டு ரூமுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர்.காஸ்ட்லி போனை எப்படி பறிப்பது என டெமோ காட்டத்தான் ஸ்வாதியை அழைத்து சென்றதாக ராஜு சொல்கிறார். ஆனால் சுவாதியோ, நான் திருட்டில் இல்லவே இல்லை என்று முதலில் சாதித்தார். பிறகு சிசிடிவி காட்சியை பார்த்ததும்தான் ஆஃப் ஆகி போனர். "வீட்டில் இருந்து காலேஜ் பீஸ் ரூ.30,000 வாங்கி வந்தேன். அதை செலவு பண்ணிட்டோம். காலேஜ் பீஸ், ரூம் வாடகை கட்ட பணமில்லை, அதனால்தான் இப்படி செய்தோம்" என்கிறார் ஸ்வாதி.

    புழல்

    புழல்

    பெண் ஹாஸ்டலில் படித்து வருகிறாள் என்று நினைத்த பெற்றோரிடம் போலீசார் இந்த விஷயத்தை சொன்னதுமே பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் ஒரு கல்லூரி மாணவி செல்போன் பறிப்பில் சம்மந்தப்பட்டிருப்பது அதிர்ச்சியான விஷயம்தான். இப்போது இருவருமே புழலில் உள்ளனர்.

    English summary
    Female College student arrested with boy friend in Chennai and confessed to Police about Cellphone snatch issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X