ஆஹா ஸ்டாலின் திரியை கிள்ளி விட்டுட்டாரே.. பாஜகவிற்கு பற்றி எரிய போகுது.. அடிக்க வேண்டிய இடத்தில் அடி
சென்னை: ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதல்வர் ஸ்டாலின் நேற்று விமான நிலையத்தில் சந்தித்தது மிகப்பெரிய அரசியல் ஸ்டேட்மெண்ட்டாக பார்க்கப்படுகிறது.
இந்திய அரசியல் பல எதிர்பார்க்காத திருப்பங்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறது. நொடிக்கு நொடி பல ஆச்சர்யமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. உத்தர பிரதேசத்தில் பாஜக தோல்வி அடைவது, அயோத்தியிலேயே பாஜக மண்ணை கவ்வுவது என்று மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் எல்லாம் நம் கண் முன் நடக்க தொடங்கி உள்ளன.

ஒரு காலத்தில் மோடியின் பரம வைரியாக இருந்தவர்கள் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு. தற்போது அவர்கள் இருவரின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்டு உள்ளது. வரும் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி பதவிப்பிரமாணம் செய்ய உள்ளார்.
இன்று அமைச்சரவை தொடர்பான ஆலோசனை நடக்க உள்ளது. எப்போதும் அமைச்சரவையை மோடி - அமித் ஷா முடிவு செய்வார்கள். இந்த முறை அமித் ஷா - நட்டா - நாயுடு - நிதிஷ் குமார் முடிவு செய்கிறார்கள். அந்த அளவிற்கு பாஜகவிற்குள் மாற்றங்கள் ஏற்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
மாநில கட்சிகளே வேண்டாம். மாநில கட்சிகளை அழித்து ஒழிப்போம் என்று கூறி சுற்றிக்கொண்டு இருந்த பாஜக அதே மாநில கட்சிகளிடம் மண்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
ஸ்டாலின்: இப்படிப்பட்ட நிலையில்தான் தேசிய அரசியலில் ஸ்டாலின் திரி ஒன்றை கிள்ளி இருக்கிறார். ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதல்வர் ஸ்டாலின் நேற்று விமான நிலையத்தில் சந்தித்தது மிகப்பெரிய அரசியல் ஸ்டேட்மெண்ட்டாக பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பு மூலம் பாஜகவிற்கு சில முக்கியமான செய்திகளை ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்.
1. முதல் விஷயம் நாயுடு - ஸ்டாலின் இருவரும் நெருங்கிய நண்பர்கள். மிக மிக நெருக்கம். இது பாஜகவை கண்டிப்பாக உறுத்தும்.
2. நாயுடு மூலமாக இனி மாநில தேவைகளை ஸ்டாலின் காக்க முடியும்.
3. தமிழ்நாட்டின் தேவைகளை டெல்லியில் பிரஷர் போட இனி நாயுடு போதும். இவர்களுக்கு இடையிலான நட்பு கண்டிப்பாக பாஜகவிற்கு உறுத்தும்.
4, ஏனென்றால் பாஜகவில் இருக்கும் சிலரையே கூட கடந்த வருடங்களில் திமுக முடிந்த அளவு தமிழ்நாட்டுக்கு சாதகமாக பயன்படுத்தி லாபி செய்தது . அப்படி இருக்க சந்திரபாபு நாயுடுவையும் ஸ்டாலின் மாநில உரிமைகளை காக்க பயன்படுத்துவார்.
5. ஆட்சி எப்போதும் வேண்டுமானாலும் கவிழும் என்ற அச்சத்தை இந்த மீட்டிங் மூலம் ஸ்டாலின் பாஜகவிற்கு கொடுத்துள்ளார்
6. நாயுடு என் நண்பர்தான்.. வாலை ஆட்டினால் அவரை இங்கே இழுப்போம் என்ற அச்சத்தை ஸ்டாலின் நாயுடு உடன் நடந்த சந்திப்பு மூலம் கொடுத்துள்ளார்.
7. இனி பாஜக சிஏஏ, என்ஆர்சி, அரசியலமைப்பு சட்ட மாற்றம், மாநில தொகுதிகள் பிரிப்பு என்று எதையும் நினைத்து கூட பார்க்க முடியாது. பாஜக இது எதையும் செய்யாது என்றால்.. பாஜகவிற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற கேள்வி சங்க் பரிவாரிகளிடம் கூட தோன்றும் காலம் வெகு தொலைவில் இல்லை.












Click it and Unblock the Notifications