சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இருக்கைகள் கூட வாங்கித்தரல.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் தமிழக அரசு ஒத்துழைக்க மறுப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இன்று வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி நியமனம் தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

சென்னையில் வெகுவாக குறைந்த நிலத்தடி நீர் மட்டம்.. 900 அடி வரை தோண்டினால் தான் தண்ணீர் சென்னையில் வெகுவாக குறைந்த நிலத்தடி நீர் மட்டம்.. 900 அடி வரை தோண்டினால் தான் தண்ணீர்

வசதிகள் இல்லை

வசதிகள் இல்லை

சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு ஓய்வூதியம், சிறப்பு படி என மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுவதாக தெரிவித்தார்.ஆனால் அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்படவில்லை என்றும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு இருக்கைகள் கூட வழங்கப்படவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.

அரசு மறுப்பு

அரசு மறுப்பு

மேலும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தமிழக அரசு உரிய முறையில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் கண்டனம் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட அரசு தலைமை வழக்கறிஞர், நிதி நிர்வாகம் தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும், செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் குறித்து அரசு அதிகாரிகளை சந்தித்து, சிலைகடத்தல் தடுப்பு அதிகாரிகள் தான் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நீதிபதிகள் கேள்வி

நீதிபதிகள் கேள்வி

மேலும் சிபிசிஐடி பிரிவினை விட சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக் 101 சதவீத வசதிகள் செய்து கொடுக்கப்பட்டாகவும், ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது தவறு என்றும் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு என்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக தமிழக அரசு அறிக்கைஅளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

விரிவான அறிக்கை

விரிவான அறிக்கை

மேலும் சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

English summary
Idol Wing Special team's basic facilities issue: Madras HC condemns TN government and ask report
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X