Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிபிசிஐடி விசாரணை உத்தரவு வாபஸ்.. கல்வி நிறுவன மரணங்களை போலீஸாரே விசாரிக்கலாம்.. உயர் நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலிசாரே விசாரிக்க வேண்டுமென்ற தனது உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் மாற்றியமைத்தது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலிசார் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகே, கைது நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீஸார் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்தது.

காவல்துறை மனு

காவல்துறை மனு

இந்த உத்தரவு காரணமாக சிபிசிஐடி போலீஸாரின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டிருப்பாக கூறி காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது, நீதிபதி சதிஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகினார். அப்போது அவர், "ஜூலை 18-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த மேற்குறிப்பிட்ட உத்தரவுக்கு பிறகு, தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த 11 மரணங்கள் குறித்த வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது" என்றார்.

'முக்கிய வழக்குகளுக்கே சிபிசிஐடி'

'முக்கிய வழக்குகளுக்கே சிபிசிஐடி'

முக்கிய வழக்குகளை விசாரிப்பதற்காகவே பிரத்யேகமாக சிபிசிஐடி உருவாக்கப்பட்டதாக கூறிய அவர், எந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்பதை வழக்கின் தன்மையை ஆராய்ந்து டிஜிபி தான் முடிவு செய்ய வேண்டும். தற்போது, உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு காரணமாக சிபிசிஐடி போலீஸாரின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

போலீஸாரே விசாரிக்க உத்தரவு

போலீஸாரே விசாரிக்க உத்தரவு

மேலும், கல்வி நிறுவனங்களில் நிகழும் மரணம் குறித்து கல்வித்துறை விசாரித்த பிறகே கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்ற உத்தரவு காரணமாக ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளதால் இந்த உத்தரவையும் மாற்றியமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதை ஏற்ற நீதிபதி, கல்வி நிலையங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க வேண்டுமென்ற தனது முந்தையை உத்தரவை மாற்றியமைத்தார். அதன்படி, இனி கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸாரே விசாரிக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 போலீஸாருக்கே அதிகாரம்

போலீஸாருக்கே அதிகாரம்

அதேபோல , கல்வித்துறை விசாரணைக்கு பின்னர் தான் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற உத்தரவையும் மாற்றியமைத்த நீதிபதி சதிஷ்குமார், வழக்கின் தீவிரத்தின் அடிப்படையில் போலீஸார் நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டார். மேலும், மரண சம்பவங்கள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தலாம் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+