காணாமல் போன கோவில் சிலைகளை மீட்க நடவடிக்கை தேவை.. அறநிலையத் துறைக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்
சென்னை: காணாமல் போன கோவில் சிலைகள், நகைகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையைச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்துக்கள், நகைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேடு காணாமல் போயுள்ளதாகவும், கோவில் சிலைகள், நகைகள் காணாமல் போயுள்ளதாகவும் கூறி வெங்கட்ராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
அப்போது மனுதாரர் வெங்கட்ராமன், சிலை கடத்தல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும், கடந்த ஆட்சியில் இந்த வழக்கில் அறநிலையத் துறை தாக்கல் செய்த அறிக்கையில், சிலைகள், நகைகள் காணாமல் போகவில்லை எனக் கூறி, திருட்டுகள் மறைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

நீதிபதிகள் கருத்து
தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அறநிலையத் துறை ஆணையருக்கு ஆவணங்கள், சிலைகள், நகைகள் மாயம் குறித்து மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, மனுதாரர் சில தீவிரமான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், சிலைகள், நகைகள் எங்கிருந்து காணாமல் போயின என்பதைக் கண்டறிய வேண்டும் என்றார்.

புதிய அறிக்கை
மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் தடுக்கும் வகையில் திட்டம் வகுக்கவும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டினர். இந்து சமய அறநிலையத் துறை, தாக்கல் செய்த அறிக்கை குறித்து நீதிபதி கூறுகையில், மனுதாரர் குற்றச்சாட்டுக்களைத் தீவிரமாக உள்ளதால், ஏற்கனவே தாக்கல் செய்த பதில் மனுவில் எடுத்துள்ள நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து புதிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

நடவடிக்கை தேவை
புராதன கோவில்களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், காணாமல் போன சிலைகள், நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications