சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹைகோர்ட்டில் ஒரே போடு.. "பள்ளிகளில் மத மாற்றம் செய்ய முயன்றால் கடும் நடவடிக்கை".. தமிழக அரசு அதிரடி

கட்டாய மதமாற்றம் குறித்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: பள்ளிகளில் மத மாற்றம் செய்யப்படுவதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை ஹைகோர்ட்டில் தெரிவித்துள்ளதையடுத்து, மத மாற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் விதிகளை உருவாக்குவதில் அரசுக்கு என்ன சிரமம்? என்று பதிலுக்கு ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த சில நாட்கள் முன்னதாக தஞ்சாவூரில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது தற்கொலைக்கு கட்டாய மதமாற்றமே காரணம் என சிலர் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து சமீபத்தில் கன்னியாக்குமரி அரசு பள்ளியில் ஆசிரியை ஒருவர் மாணவர்களை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக வெளியான புகாரில் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சென்னை மக்களே ஹேப்பியா.. பஸ் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது.. இனிமேல் செல்போனில் பார்க்கலாம் சென்னை மக்களே ஹேப்பியா.. பஸ் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது.. இனிமேல் செல்போனில் பார்க்கலாம்

வழக்கறிஞர்

வழக்கறிஞர்

இந்நிலையில்தான், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பி. ஜெகன்நாத் என்பவர் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில் உள்ளதாவது: "தமிழகத்தில் கிறிஸ்துவ மிஷனரிக்கள் மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள்.. அதன் காரணமாக தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா கடந்த ஆண்டு தற்கொலை செய்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.. இந்த ஆண்டும் அரசின் ஆதரவுடன் கிறிஸ்துவ மிஷனரிகள் செயல்பட்டு வருகின்றன.

மதமாற்ற விவகாரம்

மதமாற்ற விவகாரம்

ஏப்ரல் 12ம் தேதி அரசு கட்டுப்பாட்டில் உள்ள கன்னியாகுமரி பள்ளியில் மதமாற்ற விவகாரத்தில் மாணவியை முட்டியிட செய்த விவகாரத்தில், ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.. குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துள்ளது.. எனவே, மத ரீதியிலான செயல்பாடுகளில் கல்வி நிறுவனங்களை பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தி இருந்தாலும், மிஷனரிகளுக்கு ஆதரவான அரசு அமையும்போதெல்லாம் இந்துக்களின் உரிமைகள் ஒடுக்கப்படுகின்றன.

ஜாமீன்

ஜாமீன்

மேலும், தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியில் வரும்போது, ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதி சென்று வரவேற்றதன் மூலம், மிஷனரிகளுக்கு ஆதரவாகவும், கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் அரசு செயல்படுவது நிரூபணமாகிறது..
எனவே, மாநில அரசு மத நடுநிலைமையுடன் செயல்பட வேண்டியது அவசியம், கன்னியாகுமரி, திருப்பூர் போன்ற இடங்களில் நடந்த மதமாற்ற நடவடிக்கைளில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது..

நீதிபதிகள்

நீதிபதிகள்

அதேபோல, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டாய மத மாற்றத்தை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும், அதற்கான விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், எஸ். ஆனந்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டார்.

என்ன சிரமம்?

என்ன சிரமம்?

அப்போது "மனுதாரர் குறிப்பிட்ட திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சம்பவங்களை தொடர்ந்து எந்த கல்வி நிறுவனத்திலும் கட்டாய மத மாற்ற சம்பவங்கள் நடந்ததாக எந்த புகாரும் இல்லை. அவ்வாறு புகார் ஏதும் வந்தால் அரசு உடனடியாக எடுக்கப்படுகிறது.. எந்தப் பள்ளியில் எந்த தேதியில் மதமாற்றம் என்ற விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.. அதனால், ஆரம்ப நிலையிலேயே இதை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி வாதிட்டார்.

கேள்விகள்

கேள்விகள்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "மனுதாரர் கோரியபடி வழிகாட்டு விதிமுறைகளை அரசு ஏன் வகுக்கக்கூடாது? அது அரசுக்கு என்ன சிரமம் உள்ளது? என்று கேள்விகளை எழுப்பினர்.. அத்துடன், குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவது உரிமையாக இருந்தாலும், மதமாற்றம் செய்வது உரிமை அல்ல என்றும் சொல்லி, இந்த வழக்கை விரிவான வாதத்திற்காக நாளை தள்ளிவைத்துள்ளனர்.

English summary
major questions asked by chennai high court over tamilnadu schools forcibly conversion கட்டாய மதமாற்றம் குறித்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X