திரையில் இருந்தாலும் தலைவர் தான்! அரசியலுக்கு நான் சம்பாதிக்க வரவில்லை.. ஓபனாக பேசிய கமல்ஹாசன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : நான் ஏற வேண்டிய மலை பெரிய மலை, படிப்படியாக ஏறி வருகிறேன், என் வைராக்கியமும், வீரமும் இன்னும் குறையவில்லை எனவும், சிறையில் இருந்தால் தான் தலைவர் என்பது இல்லை, திரையில் இருந்தாலும் தலைவர் தான் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Recommended Video

    திரையில் இருந்தாலும் தலைவர் தான்! அரசியலுக்கு நான் சம்பாதிக்க வரவில்லை.. ஓபனாக பேசிய கமல்ஹாசன்!

    உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு நாளை மக்கள் நீதி மய்யம் சார்பாக, கடந்த 40 ஆண்டு காலமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கமல்ஹாசன் நற்பணி இயக்க நண்பர்களை ஒருங்கிணைத்து, உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் கமல்ஸ் பிளட் கம்யூனி என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.

    கமல்ஹாசன் பேச்சு

    கமல்ஹாசன் பேச்சு

    அதன் தொடக்க விழா இன்று காலை 11 மணியளவில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.. இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன்," எனக்கு வள்ளல் பட்டம் தேவையில்லை. உண்மையில் நடப்பவை பற்றிதான் நான் 'விக்ரம்' பட பாடலில் எழுதியுள்ளேன். நான் ஏற வேண்டிய மலை பெரிய மலை, படிப்படியாக ஏறி வருகிறேன் : என் வைராக்கியமும், வீரமும் இன்னும் குறையவில்லை. சிறையில் இருந்தால் தான் தலைவர் என்பது இல்லை, திரையில் இருந்தாலும் தலைவர் தான்.

    சினிமா தொழில்

    சினிமா தொழில்

    நான் சினிமாவை விட்டுக்கொடுக்கவில்லை, சினிமா என் தொழில்: நான் அரசியலுக்கு சம்பாதிக்க வரவில்லை. இரத்தம் தானம் கொடுத்தால் நாம் அனைவரும் சிபிசக்கரத்தியாக மாறலாம். அரசியல் என்பது வெறும் ஓட்டு எண்ணிக்கையோ அல்லது எவ்வளவு கமிஷன் வாங்கலாம் என்பது அல்ல. ஒரு ஏழையை பணக்காரன் ஆக்கும் வியாபாரம் அல்ல அரசியல்.

    ஏழைகள் அரசியல்

    ஏழைகள் அரசியல்

    ஏழைகளை அவ்வாறு இல்லாமல் செய்வதுதான் அரசியல். தெருவில் ஒருவர் மட்டும் பணக்காரனாக இருக்க கூடாது தெருவில் இருக்கும் அனைவருமே பணக்காரராக இருக்க வேண்டும். என்னை நடிக்க விட்டால் நான் 300 கோடி சம்பாதிப்பேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்றது எனக்கு அடுத்த பலமாக இருந்தது. இது என் தொழில் சினிமா என்பது எனது தொழில், அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

    பயப்பட அவசியமில்லை

    பயப்பட அவசியமில்லை

    இன்னொரு முறை நாக்கின் மேல் பல்லைப் போட்டு ஏன் நடிக்க சென்றீர்கள் என்று கேட்காதீர்கள். எனக்கு பயந்து ஒடுங்க வேண்டிய அவசியமில்லை. என்னை மிரட்ட வேண்டும் என்றால் என் அரசியல் பேச்சுகளை வைத்து மட்டும் மிரட்டலாம். ஏனென்றால் உண்மையைச் சொன்னால் அவர்களுக்கு கோபம் வரும். காரணம் உண்மையை சொல்வது தான் நேர்மை என்று சொல்லி வளர்க்கப்பட்டவன் நான்." எனப் பேசினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+