ஷாக்..ஜூஸ் குடிங்க! மயக்க மருந்தால் மயங்கிய பெண்! கண் விழித்து பார்த்தால்.. வக்கிர இளைஞருக்கு கம்பி!
சென்னை : சென்னையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக எடுத்து பணம் பறிக்க முயன்ற நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ரேகை போல செல்போன் மாறிவிட்டது. எந்நேரமும் செல்போனிலேயே உலாவி கிடக்கின்றனர் மாணவர்கள்.
ஒருபுறம் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் அரிய தகவல்கள், ஆன்லைன் வகுப்பு என செல்போன்கள் பயனுள்ளதாக இருந்தாலும் மறுபுறம் இன்ஸ்டாகிராம், பப்ஜி, ஃப்ரீ பையர் என கேம்களில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

சைபர் கிரைம்
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு பிரபலமாக துடிக்கும் இளம் பெண்கள் சிக்கலில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருவது பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இளம் வயதினர் தான் இப்படியென்றால் பல வயது வந்த பெண்கள் கூட இப்படியான குற்றங்களில் சிக்கி தவித்து வருகின்றனர். அந்த வகையில் செல்போனில் பழக்கமாக பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக எடுத்து பணம் பறிக்க முயன்ற நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் ஷாக்
சென்னை செங்குன்றத்தை அடுத்த சோழவரம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், நான் உணவகம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். மேலும் நான் சார்ந்த பகுதியில் உள்ள பெண்களுக்கு சிறு சிறு மகளிர் குழுக்கள் மூலம் கடன்களையும் பெற்றுக் கொடுக்கிறேன்.

கடன்
அந்த வகையில், அதே பகுதியில் உணவகம் ஒன்றில் சமையலராக பணியாற்றி வரும் சுரேஷ் குமாருக்கும் கடன் பெற்றுக் கொடுத்தேன். ஆனால், அவர் தவணைத் தொகையை முறையாக செலுத்தவில்லை. அவரிடம் பலமுறை அறிவுறுத்தியும் தொடர்ந்து மெத்தனம் காட்டி வந்தார். இந்நிலையில் ஒரு நாள் என்னை போனில் தொடர்பு கொண்ட சுரேஷ்குமார் பணம் முழுவதையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும், அதனை நேரில் வந்த பெற்றுச் செல்லுமாறும் கூறினார்.

மயக்க மருந்து
இதனைத் தொடர்ந்து அவர் தங்கியிருந்த அறைக்கு நான் சென்றேன். அப்போது அவர் எனக்கு கொடுத்த மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை இயல்பாக அருந்தினேன். அதில் மயக்க மருந்து கலக்கப்பட்டது எனக்கு தெரியாது. பின்னர் உடனடியாக மயக்கமடைந்து விட்டேன். நான் மயக்கமடைந்ததை பயன்படுத்திக் கொண்ட சுரேஷ் குமார் என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். மேலும் அதனை செல்போனில் படமாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி என்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார்.

மிரட்டல்
மேலும் வீடியோவை காட்டி என்னிடம் பணம் பறிக்கவும் முற்பட்டார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அந்த வீடியோவை எனது வீட்டிற்கு அனுப்பி தொந்தரவு செய்வதாக குறிப்பிட்டிருந்தார். புகாரைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த சுரேஷ் குமாரை செல்போன் சிக்னலை பயன்படுத்தி கண்டுபிடித்த காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications