மரிய வில்சனை மன்னிப்பு கேட்க சொன்ன நயினார் நாகேந்திரன்.. மதத்தை உயர்த்தி பிடிக்க தமிழை தாழ்த்துவதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதத்தை உயர்த்தி பிடிப்பதற்காக, தமிழ் மொழியை தாழ்த்தி பேசிய அமைச்சர் மரிய வில்சன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்... இது அரசியல் களத்தில் மிகுந்த கவனம் பெற்று வருகிறது.. நயினார் இப்படி வலியுறுத்த என்ன காரணம்? சட்டசபையில் நேற்று என்ன நடந்தது?

தமிழக சட்டமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், அதன் மீதான விவாதங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Nainar Nagendran Mari Wilson Tamil Language

சட்டமன்றம் - சர்ச்சை

2 நாள் வார இறுதி விடுமுறைக்கு பிறகு சட்டமன்றம் நேற்று மீண்டும் கூடிய நிலையில், எதிர்பாராத விதமாக ஒரு புதிய சர்ச்சை வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் மரிய வில்சன் உரையாற்றியபோது, சில குறிப்பிட்ட தமிழ் வார்த்தைகளை தவறாக உச்சரித்ததாக ஏற்கனவே சோஷியல் மீடியாவில் தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். அமைச்சரின் உச்சரிப்பு தொடர்பான வீடியோக்கள் இணையத்திலும் வைரலாகி விவாதங்களை கிளப்பியிருந்தன.

அமைச்சர் மரிய வில்சன்

இந்நிலையில், இந்த விவகாரம்தான் நேற்றைய தினம் சட்டமன்ற வளாகத்திற்குள்ளேயும் எதிரொலித்தது... விவாதத்தின் போது பேசிய மதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், அமைச்சரின் பட்ஜெட் உரையில் இடம்பெற்ற தவறான தமிழ் உச்சரிப்புகள் குறித்து சுட்டிக்காட்டி பேசினார். அவைத் தலைவரின் கவனத்திற்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்று அவர் பேசியது, அவையில் இருந்த உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

தனது தமிழ் உச்சரிப்பு குறித்து எம்பிஏ ராஜேந்திரன் விமர்சித்ததுமே நிதியமைச்சர் மரிய வில்சன் ஆத்திரமடைந்தார்.\.. உடனடியாக எழுந்த அவர், "எனது கிறிஸ்துவ மதம் எனக்கு ஒரு உயரிய மொழியைக் கற்றுக் கொடுத்துள்ளது. அது அன்பின் மொழி, இரக்கத்தின் மொழி.. அமைதியின் மொழி... இத்தகைய சிறப்பான மொழியை எவ்வளவு தமிழ் படித்திருந்தாலும் இங்குள்ள பாதி பேருக்கு நிச்சயம் புரியாது. நான் பிறப்பால் ஒரு கிறிஸ்துவன், புனித பைபிளை ஆழமாக படித்து உணர்ந்திருக்கிறேன்" என்று ஆவேசமாகப் பேசினார்.

கிறிஸ்தவ மதம் என்றால்?

தமிழ் உச்சரிப்பு தொடர்பான விமர்சனத்திற்கு, அமைச்சர் மரிய வில்சன் எதற்காக தான் சார்ந்த கிறிஸ்தவ மதத்தையும், பைபிளையும் தமிழ் மொழியோடு ஒப்பிட்டு பேசினார்? என்று அடுத்த சர்ச்சை கிளம்பியது.. ஒரு மொழியின் சிறப்பையும், தனது மதப் பின்னணியையும் அவையில் ஒப்பிட்டு அமைச்சர் பேசிய விதம் பல தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சட்டமன்றத்தில் அமைச்சர் பேசிய இந்த வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இதற்கு எதிரான விமர்சனங்களும் குவிந்து வருகின்றன..

தமிழ் மொழியையும் மத நம்பிக்கையையும் தேவையின்றி ஒப்பிட்டுப் பேசுவது ஏற்புடையதல்ல என்றும், மக்களின் பிரதிநிதியாக இருக்கும் ஒரு அமைச்சர் பொறுப்புடன் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

நயினார் நாகேந்திரன்

இந்த விவகாரம் அரசியல் களத்திலும் சூடுபிடித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மதத்தை உயர்த்தி பிடிப்பதற்காக, தமிழ் மொழியை தாழ்த்தி பேசிய அமைச்சர் மரிய வில்சன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், "சட்டசபையில், நிதியமைச்சர் மரிய வில்சனின் மொழியாற்றல் மீதான விவாதத்தின்போது, "என் மதம், எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது' என நிறுத்தியிருந்தால், அது அவரின் தனிப்பட்ட அனுபவம். ஆனால், "என் மதம், எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது" என, சட்டசபையில் அமைச்சர் கூறியது, தமிழின் மீதான தாக்குதலாகத் தான் தெரிகிறது.

மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்

அன்பு என்ற வார்த்தைக்கு, பல மதங்கள் கற்பித்த பல அர்த்தங்களை, "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்ற ஒற்றை வரியில் தூக்கி சாப்பிட்ட மொழி தான், நம்முடைய தாய் மொழி தமிழ். பிறப்பால், நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனால், உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் மதத்தை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் மொழியை, நீங்கள் தாழ்த்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, உணர்ச்சி மிகுதியில், தமிழ் மொழி மீது வைத்த, தவறான விமர்சனத்திற்கு, அமைச்சர் மரிய வில்சன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+