"சிறகுகள் காயப்பட்டுள்ளன".. மாரிதாஸ் வைத்த வாதம்.. வழக்கு ரத்து செய்யப்பட்டது எப்படி? என்ன நடந்தது?
மதுரை: பொது அமைதியை குலைப்பது, இரண்டு பிரிவுக்கிடையே மோதலை ஏற்படுத்துவது உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட மாரிதாஸ் மீதான வழக்குகளை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்துள்ளது. ஆனால் அவர் ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி தொடுத்துள்ள வழக்கில் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ் இரண்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். Maridhas Answers என்ற பெயரில் இவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தவறான வகையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தற்காக மதுரை நகரக் காவல்துறை மாரிதாஸை கைது செய்தது. பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை காவல்துறையில் அளித்த புகாரின் பெயரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் தனியார் தொலைக்காட்சி தொடுத்த போலீஸ் மெயில் வழக்கிலும் இவர் கைது செய்யப்பட்டு 27ம் தேதி வரை ரிமாண்ட் செய்யப்பட்டுளள்து.

மனுதாக்கல்
இந்த நிலையில் அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டதை எதிர்த்து மாரிதாஸ் மதுரை ஹைகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மாரிதாஸ் கோரிக்கை விடுத்தார். இதில் அரசு தரப்பு, மாரிதாஸ் தரப்பு, புகார் கொடுத்த பாலகிருஷ்ணன் தரப்பு ஆகியோர் நேற்றும், இன்றும் வாதங்களை வைத்தனர்.

அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதம்
அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், மாரிதாஸ் தமிழ்நாட்டிற்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் ட்விட் செய்துள்ளார். பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மாரிதாஸ் ட்வீட்டை பார்த்தால் என்ன நினைப்பார்கள்? அரசின் திட்டங்களை விமர்சிப்பது போன்றவை தவறல்ல. ஆனால், முப்படைகளின் தலைமை தளபதியின் மரணம் நிகழ்ந்திருக்கும் சூழலில், பொது தளத்தில் மக்களுக்கு வழங்கியிருக்கும் இது போன்ற தகவல் ஏற்கத்தக்கதல்ல. அவரது கைதின் காரணமாகவே வன்முறை தடுக்கப்பட்டது.

மரணம்
அவர் தமிழ்நாடு அரசிற்கு எதிராக, அரசியல் சூழ்ச்சியோடு இந்த ட்வீட்டை செய்துள்ளார். பேச்சு சுதந்திரம் எனும் பெயரில் அவர் இத்தகைய கருத்துக்களை தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல, என்று அரசு சார்பில் கூறப்பட்டது. மாரிதாஸ் தமிழ்நாட்டின் நேர்மைத் தன்மை குறித்தே கேள்வி எழுப்பியிருக்கிறார். இதில் மாரிதாஸ் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், என்னை கைது செய்யும் போது முறையாக சட்டத்தை பின்பற்றவில்லை.

மாரிதாஸ் தரப்பு வாதம்
என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில்தான் கருத்து தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டதால், கருத்து சுதந்திர சிறகுகள் காயப்பட்டுள்ளன. நான் ஆதாரங்கள் அடைப்படியிலேயே வாதங்களை வைத்து வருகிறேன் என்று மாரிதாஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

பாலகிருஷ்ணன்
மாரிதாஸுக்கு எதிராக புகார் அளித்த பாலகிருஷ்ணன் தரப்பு நேற்று வாதம் வைக்கவில்லை. இன்று வாதம் வைக்க அவகாசம் கேட்டது. இன்று வைத்த வாதத்தில், மாரிதாஸ் பலரால் பின்தொடரப்படுகிறார். அவர் செய்யும் தவறான ட்வீட்கள் பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அவர் மீதான வழக்கு இப்போதுதான் முதல் கட்டத்தில் உள்ளது. இப்போதே வழக்கை ரத்து செய்தால் அது தவறான முன் உதாரணமாக இருக்கும் என்று பாலகிருஷ்ணன் தரப்பு தெரிவித்தது.

அரசு
இன்று அரசு தரப்பு மீண்டும் வைத்த வாதத்தில், மாரிதாஸ் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல் கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டது. ஆனால் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், பொது அமைதியை குலைப்பது, இரண்டு பிரிவு இடையே மோதலை ஏற்படுத்துவது உள்ளிட்ட அனைத்து பிரிவு வழக்குகளையும் ரத்து செய்தார். இதனால் இந்த குற்றச்சாட்டின் கீழ் அவர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் அவர் ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி தொடுத்துள்ள வழக்கில் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications