அடித்து நொறுக்கப்பட்ட ஆபிஸ்..தமிழகத்தில் ஆணவ கொலைகள் அதிகம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பி கண்டனம்
சென்னை: தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கின்றன எனவும்,ஆணவக் கொலைகள் நடப்பது தமிழகத்திற்கு அவப்பெயர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளதோடு, நெல்லை காதல் விவகாரத்தில் யாரையும் கடத்திச் சென்று திருமணம் செய்து வைக்கவில்லை நாடி வருவோரை பாதுகாக்கிறோம் என கூறியுள்ளார்.
திருநெல்வேலி பெருமாள் புரத்தை சார்ந்த உதய தாட்சாயினி என்ற இளம்பெண்ணும், பாளையங்கோட்டை அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த மதன் என்ற நபருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் பாளையங்கோட்டையில் கலப்பு திருமணம் நடைபெற்றது.

இதற்கு இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்ததோடு, அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் பெண் வீட்டார் தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்
இதற்கிடையே நேற்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதுமண தம்பதிகள் இருப்பதாக பெண்ணின் வீட்டிற்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து பெண்ணின் தாயார் மற்றும் உறவினர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்தவர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் அலுவலகத்தில் இருந்த டேபிள் சேர், கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்திய மார்க்சிசஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உள்ள தீக்கதிர் பேப்பர் அலுவலகத்தையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதில் சிலருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணம் செய்த பெண்ணின் தாய் சரஸ்வதி, தந்தை முருகவேல், வெள்ளாளர் முன்னேற்றக் கழக தலைவர் பந்தல் ராஜா உட்பட 13 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமணம் நடைபெற்ற அன்று மணப்பெண்ணின் தாயார் அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவரின் காலில் விழுந்து கதறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனையடுத்து காதல் திருமணம் என்ற பெயரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக சில சமுதாய தலைவர்களும், சாதி அமைப்பைச் சேர்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இதனிடையே யாரையும் கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்து வைக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கின்றன. ஆணவக் கொலைகள் நடப்பது தமிழகத்திற்கு அவப்பெயர்; இது தமிழகத்திற்கு அழகல்ல. கட்சி அலுவலகத்தில் பட்டப்பகலில் தாக்குதல் நடக்கும் அளவுக்கு யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. காவல்துறையின் பார்வையாளராக அரசு இருப்பதை அனுமதிக்க முடியாது.
யாரையும் கடத்திச் சென்று திருமணம் செய்து வைக்கவில்லை. நாடி வருவோரை பாதுகாக்கிறோம். காதலை பெற்றோரே ஏற்றுக் கொண்டாலும், சில சாதி அமைப்புகள் தான் இதை ஊதி பெரிதாக்குகின்றன. தூண்டும் சாதி அமைப்புகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேடயமாக இருக்கும். சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை" என கூறியுள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications