அன்பு 'சாட்டர்டே'.. சென்னையில் வீடுகளில் சனிக்கிழமைகளில் மட்டும் கொள்ளை.. சிக்கியது எப்படி?
சென்னை: சூர்யாவின் சனிக்கிழமை என்ற திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் சில மாதம் முன்பு வெளியாகி இருந்தது. அதில் ஹீரோ வாரம் முழுவதும் கோபத்தை கட்டுப்படுத்தி சனிக்கிழமை ஒரு நாள் கோபப்படுவார். அதேபோல் சென்னையைச் சேர்ந்த ஒரு கொத்தனார், வாரம் முழுவதும் அமைதியாக வேலை செய்துவிட்டு, சனிக்கிழமை மட்டும் திருடுவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம்.
சென்னையின் புறநகர் பகுதியான குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், தண்டலம் போன்ற பகுதிகளில் சனிக்கிழமை இரவு நேரத்தில் அடுத்தடுத்து பூட்டி இருந்த வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் நகைகள் தொடர்ந்து மர்ம நபர்களால் திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து போரூர் உதவி கமிஷனர் கலியசுந்தரம் தலைமையில் தனிப்படையினர் சம்பவ இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.

சென்னையின் புறநகர் பகுதியான குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், தண்டலம் போன்ற பகுதிகளில் சனிக்கிழமை இரவு நேரத்தில் அடுத்தடுத்து பூட்டி இருந்த வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் நகைகள் தொடர்ந்து மர்ம நபர்களால் திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து போரூர் உதவி கமிஷனர் கலியசுந்தரம் தலைமையில் தனிப்பட்டையினர் சம்பவ இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.
இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரின் முகத்தில் துணியால் சுற்றிக்கொண்டு கையில் இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர் விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 33 வயதாகும் அன்பு என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் வித்தியாசமான தகவல்கள் வெளியாகின.
இதன்படி கொத்தனார் வேலை செய்து வரும் அன்பு, திருட்டு சம்பவம் நடந்த குடியிருப்பு பகுதியிலேயே புதிதாக வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அந்த பகுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்துவரும் நிலையில் அன்பு அங்கேயே தங்கி கொத்தனார் வேலையில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அன்பு மட்டும் அங்கேயே தங்கியிருந்த நிலையில் உடன் யாரும் இல்லாமல் இருந்ததால் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்.
அன்பு சனிக்கிழமை இரவு நேரங்களில் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து சாவகாசமாக நடந்து சென்று பூட்டியிருக்கும் ஒவ்வொரு வீடுகளின் பூட்டையும் உடைத்து பணம், நகை போன்றவற்றை திருடியது தெரியவந்தது. குறிப்பாக சனிக்கிழமை இரவுகளில் பெரும்பாலான வீடுகளில் யாரும் இருக்க மாட்டார்கள்.. பலர் வீடுகளை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு செல்வார்கள்.. இதை அறிந்த அன்பு சனிக்கிழமை இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இப்படி சனிக்கிழமைகளில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் பூட்டை உடைத்த அன்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், 25 பவுன் நகை போன்றவற்றை கொள்ளையடித்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த 22 பவுன் நகைகளை மாங்காடு போலீசார் கைப்பற்றினார்கள். அன்பு மீது வேளச்சேரி, பள்ளிக்கரணை, சிட்லபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. வார நாட்களில் கொத்தனார் வேலை செய்யும் அன்பு சனிக்கிழமை இரவு மட்டும் வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். அந்த பணத்தில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications