சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கண்ணீரை வரவைத்த காட்டேரி.. பிபின் ராவத்தை கவுரவப்படுத்த வந்தது அறிவிப்பு.. பூரிக்கும் நீலகிரி

காட்டேரி பூங்காவுக்கு பிபின் ராவத் பெயர் சூட்ட முடிவாகி உள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: குன்னூர் காட்டேரி பூங்காவுக்கு பிபின் ராவத் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.. இது குறித்த தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது, நீலகிரி மக்களுக்கு பூரிப்பை தந்து வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம், ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைத்தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.. குன்னூர் அருகே இந்த காட்டேரி பகுதியில் இந்த விபத்து நடந்தது.

அதுவரை அதிகம் அறியப்படாத பகுதி காட்டேரி.. இதுவும் மலைப்பகுதிதான்.. இங்கு மஞ்சபாசத்திரம் என்ற இடம் உள்ளது.. குன்னூரில் இருந்து நஞ்சப்ப சத்திரம் 5 கி.மீ தூரத்தில் உள்ளது. தேயிலை தோட்டங்கள் நிறைந்து காணப்படும்..

எனக்கும் அழைப்பு வந்தது.. ஆனால் நான் அப்படி அல்ல.. மவுனம் கலைக்கும் சஞ்சய் ராவத்! எனக்கும் அழைப்பு வந்தது.. ஆனால் நான் அப்படி அல்ல.. மவுனம் கலைக்கும் சஞ்சய் ராவத்!

 வாட்டர் ப்ளீஸ்

வாட்டர் ப்ளீஸ்

இந்த தோட்டங்களுக்கும், மலைப்பகுதிக்கும் நடுவில்தான் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.. பயணம் செய்தவர்களை உயிருடன் மீட்க அதிகாரிகள், எவ்வளவோ போராடினார்கள்.. ஆனால், முடியவில்லை.. இதில் ஹெலிகாப்டர் நொறுங்கியதுமே, பலர் உடல் கருகிவிட்டது.. பிபின் ராவத் மட்டும் உயிருக்கு போராடிய நிலையில், அவரை அங்கிருந்தோர் மீட்டுள்ளனர்.. அப்போது வாட்டர் ப்ளீஸ் என்று அவர்களிடம் கேட்டுள்ளார் பிபின்.. ஆனால், அவரை காப்பாற்றுவதற்குள் உயிர்பிரிந்துவிட்டது.

 யோசனை

யோசனை

பிபின் ராவத், வாட்டர் பிளீஸ் என்று கேட்ட அவரது கடைசி வார்த்தை குன்னூர் காட்டேரி மிகவும் உலுக்கி எடுத்துவிட்டது.. பிபின் ராவத்திதன் மரணத்தின் சோகத்தில் இருந்து நீலகிரி மக்களால் விடுபட முடியவில்லை.. இந்தியா முழுவதும் காட்டேரி என்ற பெயர் அப்போதுதான் அறியப்பட்டது.. இந்த காட்டேரிக்கு புகழ் சேர்க்கும்வகையில், புதிய யோசனை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காட்டேரி

காட்டேரி

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தின் அருகே ஒரு பூங்கா உள்ளது.. இதற்கு காட்டேரி பூங்கா என்று பெயர்.. இந்த பூங்காவுக்கு பிபின் ராவத்தின் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.. இது தொடர்பாக, வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய முன்னாள் துணை தலைவர் வினோத்குமார் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.. இப்போது, இந்த கடிதமானது தோட்டக்கலை இணை இயக்குனருக்கு பரிசீலனைக்காக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

 பிபின் ராவத்

பிபின் ராவத்

இதுகுறித்து தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி சொல்லும்போது, "நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி பூங்கா மற்றும் ரன்னிமேடு ரெயில் நிலையத்திற்கு முப்படைத்தளபதி பிபின் ராவத் பெயர் சூட்ட கேட்டிருந்தோம்.. அதன்படி மாநில தோட்டக்கலை கட்டுப்பாட்டில் உள்ள காட்டேரி பூங்காவுக்கு மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் பெயர் சூட்டுவதற்கு மாநில அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டு காட்டேரி பூங்காவுக்கு முப்படை தளபதி பிபின் ராவத் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

மானெக்‌ஷா

மானெக்‌ஷா

மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரன்னிமேடு ரெயில் நிலையத்திற்கு முப்படைத்தளபதி பெயர் சூட்டுவது தொடர்பாக ரெயில்வே துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.. நீலகிரி மக்களுக்கு இந்த அறிவிப்பு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. காரணம், வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் இங்கு இருக்கிறது.. இதனால், அடிக்கடி ஹெலிகாப்டர்களும், ராணுவ வீரர்களும் இங்கு வந்து செல்வதும் வழக்கம்.. தவிர, ஜெனரல் மானெக்‌ஷாவின் தேசப்பற்றையும் அதிரடிகளையும் நேரடியாக அறிந்தவர்கள்.. அதனால், ராணுவத்தின் முக்கியத்துவத்தை நீலகிரி மக்கள் இயல்பாகவே உணர்ந்துள்ளனர்.

மலையரசி

மலையரசி

பிபின் ராவத் சடலத்தை கொண்டு சென்றபோதுகூட, வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக சென்றபோது, கதறி அழுதுவிட்டனர்.. பலர் பதட்டமடைந்தனர்.. பலர் உணர்ச்சிவசப்பட்டனர்.. வாகனங்கள் அருகில் வந்ததும் வீர வணக்கம் என்ற ஒற்றை சொல்லை உதிர்க்கவும், அந்த அதிர்வு விண்ணை முட்டியது.. ஒருநாள் கடையடைப்பை நடத்தி தங்கள் அஞ்சலியை பதிவுசெய்தாலும், அன்றைய தினம் விடிய விடிய தூங்காமல் தவித்தாள் மலையரசி... இனி இன்றைய புது அறிவிப்பால், காட்டேரி மட்டுமல்ல, நீலகிரி முழுக்க பிபின் ராவத் பெயர் காலத்துக்கும் ஒலித்து கொண்டே இருக்கும்.. கம்பீரமாக..!

English summary
mass announcement and bipin rawat named coonoor kateri park காட்டேரி பூங்காவுக்கு பிபின் ராவத் பெயர் சூட்ட முடிவாகி உள்ளதாக கூறப்படுகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X