சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாஸ்டர் பிளான்.. நடவடிக்கையில் இறங்கிய "வாத்தி" டிராவிட்.. வீரர்களிடம் கேட்கப்பட்ட அந்த ஒரு கேள்வி!

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய அணியில் பயிற்சியாளராக இணைந்து இருக்கும் ராகுல் டிராவிட் வீரர்களிடம் முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2021 உலகக் கோப்பை டி 20 தொடரில் தோல்வி அடைந்த இந்திய அணி நியூசிலாந்து தொடருக்கு தயாராகி வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்த மாதம் 25ம் தேதியில் இருந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆட உள்ளது. அதேபோல் நவம்பர் 17ம் தேதி நடக்க உள்ள டி 20 தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இளம் இந்திய டி 20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதற்காக இந்திய வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.

தடுப்பூசி செலுத்தாமலேயே சான்றிதழ் கொடுத்தது எப்படி? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் தடுப்பூசி செலுத்தாமலேயே சான்றிதழ் கொடுத்தது எப்படி? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

 ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

இந்த நிலையில் நேற்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணியுடன் இணைந்தார். ஜெய்ப்பூரில் இவர்கள் பயோ பபுளில் இணைந்தனர். இதையடுத்து வீரர்களை சந்தித்து தனி தனியாக ராகுல் டிராவிட் ஆலோசனை செய்தார். இந்த உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்திய அணி தோல்வி அடைய முக்கிய காரணம் வீரர்கள் சோர்வாக இருந்ததுதான். வீரர்கள் தொடர்ந்து இங்கிலாந்து தொடர், ஆஸ்திரேலியா தொடர், ஐபிஎல் தொடர் என்று பல தொடர்களில் ஆடியதால் சோர்வாக இருந்தனர்.

பேசினார்

பேசினார்

தொடர் பயோ பபுளில் இருந்ததால் வீரர்கள் சோர்வாக இருந்துள்ளனர். இதைப்பற்றி பும்ரா உள்ளிட்ட வீரர்களும், ரவி சாஸ்திரியும் கூட பேசி இருந்தனர். இந்த நிலையில்தான் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் ஆனதும் இது தொடர்பான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார். அதன்படி வீரர்களை சந்தித்து தனி தனியாக ராகுல் டிராவிட் ஆலோசனை செய்துள்ளார். அவர்களிடம் முக்கியமான ஒரு கேள்வியை கேட்டதோடு, முக்கிய வாக்குறுதி ஒன்றையும் கொடுத்துள்ளார்.

கேள்வி

கேள்வி

அதன்படி ஒவ்வொரு வீரரையும் தனியாக அழைத்து ...உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது. சோர்வாக உணர்கிறீர்களா. பிட்டாக இருப்பாதாக உணர்கிறீர்களா .. ரெஸ்ட் வேண்டுமா என்று தடாலடியாக கேட்டுள்ளார். அதோடு உங்களுக்கு ரெஸ்ட் தேவைப்பட்டால் கொடுப்போம். உங்கள் இடம் காலியாகிவிடும், வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்க வேண்டாம்.

ரெஸ்ட்

ரெஸ்ட்

உங்களுக்கான இடம் எப்போதும் அணியில் இருக்கும். இளம் வீரர்கள் அணிக்குள் வந்து நன்றாக ஆடினாலும் கூட ஓய்வில் இருக்கும் வீரர்கள் மீண்டும் வரும் போது அவர்களுக்கு முன்னுரிமை அளிப்போம். அதனால் ஓய்வு எடுப்பது குறித்து அச்சப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். அதோடு ஒவ்வொரு வீரரிடமும் தான் என்ன எதிர்பார்க்கிறேன் என்றும் ராகுல் டிராவிட் கூறி இருக்கிறாராம்.

நடவடிக்கை

நடவடிக்கை

அதோடு விரைவில் பயோ பபுள் ரத்து குறித்து பேசி வருகிறோம். பயோ பபுள் இல்லாமல் ஆட ஏற்பாடு நடக்கும் என்று கூறி உள்ளாராம். முக்கியமாக இங்கிலாந்து அணி போல டெஸ்ட் அணிக்கு ஒரு டீம், ஒருநாள் அணிக்கு ஒரு டீம், டி 20 அணிக்கு ஒரு டீம் என்று மூன்று டீம்களை களமிறக்க ராகுல் பரிந்துரை செய்துள்ளாராம். இதனால் பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும், ரொட்டேஷன் பாலிசி அமலில் இருக்கும் என்று கூறியுள்ளாராம்.

English summary
Master action by coach Rahul Dravid with Team India ahead of New Zealand series.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X