கிட்ட கிட்ட நெருங்கிய தினகரன்.. பட்டென போட்ட யூடர்ன்.. அஸ்திரம் எடுக்கும் பாஜக.. தலைவலி எடப்பாடிக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பாஜக அமமுக 2 வியூகங்களை முன்னெடுக்கின்றன
சென்னை: அமமுக, பாஜக இரு கட்சிகளிலும், புது அஸ்திரம் ஒன்று கையில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. என்ன அது?
எடப்பாடியை பொறுத்தவரை, ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு தயாராக இல்லை.. கட்சி 95 சதவீதம் தன்னிடம், நிர்வாகிகளும் தன்னிடம் உள்ளதால், தன்னையே, அதிமுகவின் தலைமையாக அங்கீகரிக்க சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி..
ஆனால், தொண்டர்களிடம் போதுமான ஆதரவு இல்லை, குறிப்பாக, தென்மண்டலங்களில் எடப்பாடிக்கான ஆதரவு இல்லை, கொங்கு மண்டலத்திலேயே கடந்த முறை பாமகவின் வாக்குகள்தான் எடப்பாடிக்கு உதவியாக இருந்திருக்கிறது.

ஸ்ட்டிராங்
அந்தவகையில், களத்தில் போதுமான ஆதரவு எடப்பாடிக்கு இல்லை என்பதாலும், தென்மண்டலங்களை நழுவவிட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், ஒருங்கிணைந்த அதிமுகவை மேலிடம் வலியுறுத்தி வருகிறது.. எனினும், எடப்பாடி பழனிசாமி, தன் தரப்பில் பல ஸ்ட்ராங் விஷயங்களை மேலிடத்துக்கு புரிய வைத்து வருவதாக தெரிகிறது.. குறிப்பாக, "திமுகவை கடுமையாக தான் எதிர்த்து வருவதுடன், அதில் உறுதியாகவும் இருந்து வருகிறேன்.. உதயநிதிக்கு அமைச்சர் பதவி என்பது முதல், திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறேன்.

சலசலப்புகள்
எவ்வளவு சலசலப்புகள் நடந்தாலும், தன்னிடம் உள்ள 95 சதவீத ஆதரவாளர்களை நழுவவிடாமல் கைப்பிடியில் வைத்திருக்கிறேன். ஆனால், ஓபிஎஸ்ஸோ இந்த 6 மாதத்தில் சொன்னதை செய்தாரா? மாநாடு நடத்த போவதாக சொன்னாரே, நடத்தினாரா? போட்டி பொதுக்குழுவை நடத்த போவதாக சொன்னார்களே? நடத்தினார்களா? சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க போவதாக சொன்னார்களே? செய்தார்களா? அதனால், அதிமுக தலைமைக்கான முழு தகுதியும் தனக்கே உள்ளது" என்ற நியாயங்களை அடுக்கி உள்ளதாக தெரிகிறது.

நாம் தமிழர் கட்சி
எனினும், மேலிடம் தன் நிலைப்பாட்டில் உறுதியாகவே உள்ளது.. குஜராத் விழாவை புறக்கணிக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி துணிந்துவிட்டது, பாஜக தலைவர்களுக்கு சற்று அதிர்ச்சியையே தந்துள்ளதாம்.. அதுமட்டுமல்ல, அதிமுகவின் ஆதரவு ஓட்டுக்களை நாம் தமிழர் கட்சி போன்றவை ஒவ்வொரு தேர்தலிலும் அறுவடை செய்து வருவதையும் கணக்கு போடப்பட்டுள்ளது. அதனால்தான், வேறு ஒரு வியூகத்தை கையில் எடுக்கலாமா என்று மேலிடம் பிளான் செய்கிறதாம்..

சிக்கல் + கலக்கம்
அதாவது, எடப்பாடி பழனிசாமியை பாஜகவை எதிர்க்க வைத்து, திமுகவையும் எதிர்க்க வைத்து, நாம் தமிழர் கட்சியையும் எதிர்க்க வைத்து, பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்க வைத்தால் என்ன? என்று யோசிக்கிறார்களாம்.. இப்படி சிதறடிப்பதன் மூலமாக பாஜக கடந்த தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளதால், இதை இம்முறையும் ஒர்க் அவுட் செய்து பார்க்கலாமா? என்று நினைக்கிறார்களாம்.. இது மிகவும் சிக்கலான விஷயம் என்றாலும், நடைமுறை சாத்தியமா? எந்த அளவுக்கு பலன் தரும் என தெரியவில்லை என்ற கலக்கமும் உள்ளது.

கூல் கேப்டன்
அதேபோல, டிடிவி தினகரனும் புது ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.. மெகா கூட்டணி என்று அன்று எடப்பாடி பழனிசாமி நாமக்கல்லில் சொன்னதுமே, அந்த மெகா கூட்டணியில் அமமுகவும் இடம்பெறும் என்பதுபோல கூறியிருந்தார்.. ஆனால், அதற்கு பிறகு, தன் நிலைப்பாட்டை மாற்றி, எடப்பாடி அல்லாத அதிமுகவுடன் கூட்டணி என்று தற்போது சொல்லி வருகிறார்.. எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பதுடன் மட்டுமே நிறுத்தி கொள்வதுடன், எடப்பாடியுடன் இணைய வாய்ப்பில்லை என்பதையும் வலியுறுத்தி கொண்டே உள்ளார். தினகரனின் இந்த மாற்றத்திற்கு காரணம், எடப்பாடியை ஆதரித்து பேசுவது தனக்கு சறுக்கல் என்பதை உணர்ந்துள்ளாராம்.

அஸ்திரம்
எடப்பாடி பழனிசாமியையோ, அவரது தலைமையிலான கூட்டணியையோ, ஆதரித்துவிட்டால், அது அமமுகவுக்கே பலவீனத்தை தந்துவிடுவதுடன், அமமுக நிர்வாகிகள் பெரும்பாலும் ஓபிஎஸ்ஸை ஆதரித்துவிடுவார்களோ என்ற கலக்கமும் சூழ்ந்துவிட்டதாக தெரிகிறது.. அதனால்தான், எந்த அளவுக்கு எடப்பாடியை எதிர்த்து அரசியல் செய்கிறோமோ, அது தனக்கு பலம் என்பதால், தொடர்ந்து எடப்பாடியை காரசாரமாக பேசிவருகிறாராம் டிடிவி தினகரன். தினம் தினம் இப்படி எத்தனையோ வியூகங்களும், அனுமானங்களும் வட்டமடித்தாலும், எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்துதான், கள நிலவரம் முடிவாகும் என்கிறார்கள்.. பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications