வைகோ வைத்த செக்?.. பட்டைய கிளப்பும் மதிமுக.. விழிக்கும் திமுக.. இடப்பங்கீடு காரணமா?.. என்ன நடக்கிறது
: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மதிமுக தயாராகி வருகிறது
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் விருப்ப மனுக்களை பெறும் அறிவிப்பை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார்.. இதுதான் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது மதிமுக.. விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில், விருப்ப மனுக்களை பெறும் அறிவிப்பை, மதிமுக பொதுச்செயலர் வைகோ அதிரடியாக வெளியிட்டுள்ளார்..
இதுகுறித்து அவர் விடுத்த அறிக்கையில், "நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம், விருப்ப மனுக்களை பெற தலைமை நிலைய பிரதிநிதிகள், வரும் 29ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

விருப்ப மனு
வேட்புமனு கட்டணமாக, மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 1,000 ரூபாயும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 500 ரூபாயும், பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு 250 ரூபாயும் செலுத்த வேண்டும். ஏற்கனவே வாழ்நாள் உறுப்பினராகவும், சங்கொலி பத்திரிகை சந்தாதாரராகவும் இல்லாதவர்கள், விருப்பு மனுவுடன் வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் 500 ரூபாயும், சங்கொலி பத்திரிகை ஆண்டு சந்தா 550 ரூபாயும் செலுத்த வேண்டும்" என்று வைகோ அதில் தெரிவித்துள்ளார்.

அங்கீகாரம்
வைகோவின் இந்த அதிரடி அறிவிப்புக்கு என்ன காரணம்? நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலேயே 20 சீட்டாவது வேண்டும் என்பதிலும், தனி சின்னத்தில்தான் போட்டி என்பதிலும் மதிமுக உறுதியாக இருந்தது.. சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாத வகையில் மதிமுக இருந்ததால், தன் அங்கீகாரத்தை காப்பாற்றவே 20 தொகுதிகளிலாவது போட்டியிட விரும்புவதாக கருதப்பட்டது.

மதிமுக
அதுமட்டுமல்ல, மற்றவர்கள் ஆட்சியமைக்க உறுதுணையாக தாங்கள் இருக்கும்போது, தங்களின் கட்சியின் அங்கீகாரத்தையும் காப்பாற்ற முன்வர வேண்டும் என்பது மதிமுகவின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக அப்போது இருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி சீட், தொகுதிகள் அமையவில்லை.. இந்நிலையில்தான் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது.. இதில், மதிமுக கணிசமான வெற்றியையும் பெற்றிருந்தது..

கவுன்சிலர்கள்
இதுகுறித்து வைகோ செய்தியாளர்களிடம் சொன்னபோது, "ஊரக உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணி பெற்றுள்ளது... 17 ஒன்றிய கவுன்சிலர்கள் 2 மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் 87 ஊராட்சி மன்றங்களில் வெற்றி பெற்றுள்ளோம்... குருவிகுளம் ஒன்றியத்தில் 17 கவுன்சிலர் களில் 10 கவுன்சிலர்களை மதிமுக பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் மதிமுகவினருக்கு புத்துணர்ச்சியை, புதிய உத்வேகத்தை, எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது... இனி 4 கால் பாய்ச்சலில் மதிமுக முன்னேறி செல்லும்" என்றார்.

விருப்ப மனு
இதுதான் வைகோவுக்கு பூஸ்ட்டாக அமைந்து விட்டது போலும்.. நடக்க போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இப்போதே ரெடியாகிவிட்டது மதிமுக.. விருப்ப மனுக்களை பெறும் அறிவிப்பை, வைகோ வெளியிட்டுள்ளார்... நகர்புற உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர் பதவி பங்கீடு குறித்து திமுகவிடம், மதிமுக இன்னும் அதிகாரப்பூர்வமாக பேச்சு எதுவுமே நடத்தவில்லை... ஆனால், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டதை விட, அதிக இடங்களில் மதிமுக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது..

துரை
போட்டியிட விரும்பும் மதிமுகவினரிடமிருந்து, விருப்ப மனுக்கள் அதிக அளவில் பெற்று விட்டால், அதை காரணம் காட்டி, அதிக இடங்களை திமுகவிடம் கேட்கலாம் என்று வைகோ நினைக்கிறாராம். அதனால்தான், இந்த முறை மதிமுகவுக்கு குறைந்த இடங்களை கொடுத்து ஒதுக்கிவிடக்கூடாது என்பதற்காக, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே, கட்சியினரிடம் விருப்ப மனுக்களை வாங்க துவங்கி விட்டார் என்கிறார்கள்.. இந்த முறை துரை வையாபுரிக்கும் புதிய பொறுப்பு வந்துள்ளதால், நடக்க போகும் தேர்தலுக்கு மதிமுக ஜரூர் வேகத்தில் ரெடியாகி கொண்டிருக்கிறது..!
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications