தமிழ்நாடு அரசின் இயற்கை விவசாய கொள்கை! மண்ணை காக்கும் மகத்தான பணி! மதிமுக வரவேற்பு!
தமிழ்நாடு அரசின் இயற்கை விவசாய கொள்கைக்கு பெருகும் வரவேற்பு.
சென்னை: தமிழ்நாடு அரசின் இயற்கை விவசாய கொள்கையை மதிமுக மனதார வரவேற்பதாக தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ.
இக்கொள்கையின் படி, நச்சு தன்மை வாய்ந்த ரசாயண இடுபொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்பதன் மூலம், நீரையும், மண்ணையும் பாதுகாக்க வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

ரசாயண உரங்கள்
வேளாண்மையில் பயன்படுத்தப்படும் ரசாயண உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள், மண்புழுக்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, மண்வளம் பாதிக்கப்படுகிறது. இந்த ரசாயண உரங்களில் கலந்து இருக்கும் நச்சு வேதிப் பொருட்கள் நம் உடலில் நோய்கள் உருவாவதற்கு காரணமாக அமைகின்றன.

இயற்கை வேளாண்மை
இன்றைய சூழலில், உணவு பழக்க வழக்கங்களால் சிறுவர்களுக்கு கூட இதய நோய்கள், ஒவ்வாமை, தோல் நோய்கள், புற்று நோய்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிறுநீரகங்கள் தொற்றுகளுக்கு ஆளாகி பாதிப்படைகின்றன. இந்த அழிவை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்க இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் முறை அவசியமாகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதல் கட்டமாக, பல்வேறு விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு 'தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023' உருவாக்கப்பட்டுள்ளது.

நீரையும், மண்ணையும்
இக்கொள்கையின் படி, நச்சு தன்மை வாய்ந்த ரசாயண இடுபொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்பதன் மூலம், நீரையும், மண்ணையும் பாதுகாக்க வழிவகுக்கும். மேலும், அங்கக சான்றளிப்பு முறைகளில் எளிமை, பண்ணைக்கு அருகிலேயே உற்பத்தி செய்யக் கூடிய தொழு உரம், மண்புழு உரம் போன்ற இடு பொருள்களை ஊக்குவித்தல், சுற்றுச் சூழலுக்கு உகந்த உணவை வழங்குதல் ஆகியவற்றிருக்கும் இக்கொள்கை வழிவகுக்கிறது.

மனதார வரவேற்கிறோம்
அனைத்து வகையான பாரம்பரிய நாட்டு விதைகளை பாதுகாக்க மாநில அளவில் மரபணு வங்கி உருவாக்கப்படும் என்பதையும் இக்கொள்கை உறுதிபடுத்துகிறது. தமிழ் மக்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, இயற்கை வேளாண்மையை அறிமுகப்படுத்தும் தமிழ்நாடு அரசின் இக் கொள்கையை மனதார வரவேற்கிறோம்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications