Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொருளாதார இடஒதுக்கீட்டின் “காட் ஃபாதர்”.. 1979ல் எம்ஜிஆர் கொண்டு வந்த சட்டம்! போராடி வென்ற கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயர்சாதி ஏழைகளுக்கான பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. ஆனால், பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு முதலில் விதைப் போட்டவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் என்பது உங்களுக்கு தெரியுமா?

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது என்று திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் விமர்சித்து வரும் சூழலில், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே பொருளாதார இடஒதுக்கீட்டுக்கான விதை சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டில் போடப்பட்டு இருக்கிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பொருளாதார அடிப்படையிலும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற உத்தரவை கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

பொருளாதார இடஒதுக்கீடு

பொருளாதார இடஒதுக்கீடு

1980 ஆம் ஆண்டு லோக் சபா தேர்தலில் அதிமுகவை வெற்றிபெற செய்ய எம்ஜிஆர் இந்த திட்டத்தை கொண்டு வந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த இடஒதுக்கீட்டின் கீழ் ஆண்டுக்கு ரூ.9,000க்கும் குறைவான வருவாய் பெறும் மக்கள் பயனடைவார்கள் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கருணாநிதி எதிர்ப்பு

கருணாநிதி எதிர்ப்பு

கடந்த 1970 ஆம் ஆண்டு சட்டநாதன் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் பொருளாதார இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக எம்ஜிஆர் அரசு விளக்கம் அளித்தது. ஆனால், இதற்கு அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக தலைவர் கருணாநிதி, திராவிடர் கழகத்தின் அப்போதைய செயலாளர் கி வீரமணி ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

எம்ஜிஆர் கொண்டு வந்த பொருளாதார இடஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், அதற்கு எந்த வித நியாயமான காரணங்களும் இல்லை எனவும் தெரிவித்தார்கள். "சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின் தங்கி இருப்பவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்க வேண்டும். இதில் பொருளாதாரத்தை கொண்டு வருவது தவறான தீர்வாகும்." என விமர்சித்தனர்.

பின்வாங்காத எம்ஜிஆர்

பின்வாங்காத எம்ஜிஆர்

ஆனால், எம்.ஜி.ஆர். தனது நிலைபாட்டில் இருந்து பின் வாங்கவில்லை. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் வழங்குவதை மாற்ற முடியாது என அவர் கூறினார். இந்த உத்தரவு பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த 31 சதவீத இடஒதுக்கில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அவர் கூறினார்.

 60% பிற்படுத்தப்பட்டோர்

60% பிற்படுத்தப்பட்டோர்

பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 31 சதவீதமும், பொதுப்பிரிவில் 29 சதவீதமும் என மொத்தம் 60 சதவீதம் கல்லூரிகளில் சீட் பெறுகின்றனர் என எம்ஜிஆர் தெரிவித்தார். இந்த உத்தரவால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஏழைகள், குறிப்பாக கொத்தனார்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், கால் நடை மேய்ப்பவர்கள், ரிக்சா ஓட்டுநர்கள் பயனடைவார்கள் என்று கூறினார்.

 உயர்சாதி இடஒதுக்கீடு

உயர்சாதி இடஒதுக்கீடு

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் கடந்த 1979 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில் பேசிய எம்ஜிஆர், உயர்சாதியினருக்கும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வரப்போவதாக அறிவித்தவுடன் தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் எழுந்தன. இதற்கு கருணாநிதி, கி வீரமணி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

அதிமுக படுதோல்வி

அதிமுக படுதோல்வி

இது ஒரு ஆபத்தான திட்டம் என்று விமர்சித்தார் கருணாநிதி. இந்த திட்டம் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கான வாய்ப்பை குறைக்கும் என அவர் எச்சரித்தார். எம்ஜிஆர் வெளியிட்ட அரசாணையை எரித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட 1980 லோக் சபா தேர்தலில் அதிமுக வெறும் 2 தொகுதிகளிலேயே வென்றது.

எம்ஜிஆர் அதிர்ச்சி

எம்ஜிஆர் அதிர்ச்சி

இதனால் அதிர்ச்சியில் உறைந்த எம்ஜிஆரிடம் பொருளாதார இடஒதுக்கீடே தோல்விக்கு காரணம் என அவரது கட்சியினரே கூறினர். இதனை தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார் எம்.ஜி.ஆர். அந்த கூட்டத்தை திமுக புறக்கணித்தது. அதில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்களிடம் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி ஆலோசித்தார். அடுத்த 2 நாட்களிலில் அந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்வதாக எம்ஜிஆர் அறிவித்தார்.

 உயர்சாதியினர் எதிர்ப்பு

உயர்சாதியினர் எதிர்ப்பு

இதனை தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த எம்ஜிஆர் முடிவு செய்தார். இதற்கு எதிராக உயர்சாதியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதற்கென தனி குழுவை அமைத்து கள ஆய்வு செய்ய உத்தரவிட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜே.ஏ.அம்பா சங்கர் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த 50% இடஒதுக்கீடு சரி என அறிக்கை சமர்பித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+