இனி மின்கட்டண தாமதத்துக்கு ஃபைன் இல்லை.. சென்னை உள்பட 4 மாவட்ட தொழில் முனைவோருக்கு கால அவகாசம்
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட காலநீட்டிப்பானது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மின்நுகர்வோர்கள் அனைவரும் பொருந்தும் என் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பாதித்தது. இதில் காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

மாறாக சென்னை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். உணவு இன்றியும் தவித்தனர்.
இதையடுத்து கடந்த 5ம் தேதி முதல் மீட்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. அதோடு பல ஆயிரம் மக்கள் படகுகளில் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது பல இடங்களில் மழை வெள்ளம் வடிந்து படிப்படியாக சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இதற்கிடையே தான் மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் டிசம்பர் 4 முதல் டிசம்பர் 7 வரை இருந்ததது. மழை வெள்ளத்தால் இந்த காலஅவகாசத்தை அதிகரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின்கட்டணத்தை அபராதமின்றி செலுத்துவதற்கான கடைசி தேதி என்பது டிசம்பர் 18 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
அதோடு மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்துடன் டிசம்பர் 4 முதல் டிசம்பர் 6 வரை அபராத தொகை செலுத்தி இருப்பின் அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின்கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும் என மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் இன்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், மிக்ஜாம் புயல் கனமழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தொடர்ந்து கடந்த 6ம் தேதி அறிவிப்பானை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட மின்உபயோகிப்பாளர்கள் அபராதம் இன்றி மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 வரை காலநீட்டிப்பு செய்து வழங்கப்பட்டது.
தற்போது இந்த காலநீட்டிப்பில் சிறு, குறு, நடுத்தர தொழில் மின்நுகர்வோர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஆணையின்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மின்நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும்'' என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
-
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications