10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது - அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் 2023ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது என்பது பற்றிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி 2023ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே கணினி அல்லது மொபைல் மூலமாக ஆன்லைனில் பாடங்களை கற்று வந்தனர்.

கட்டுக்குள் வந்த கொரோனா
கொரோனா பரவல் படிப்படியாக கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அதை தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை என அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கின. சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டாலும் காலாண்டு,அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

பொதுத்தேர்வுகள்
ஜனவரி மாதம் ஓமிக்ரான் பரவல் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கின. 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வும் நடைபெற்றது. இதனையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன.

ரிசல்ட் எப்போது
பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

2022-23 கல்வியாண்டு
செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரும் கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்று கூறினார். பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என்றும் ஜூன் 27ஆம் தேதியன்று 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

2023 மார்ச் 13ல் பொதுத் தேர்வு
பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவித்த கையோடு பொதுத் தேர்வு நடைபெறும் தேதியையும் அறிவித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதியன்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதியன்று தொடங்கும் என்றும் கூறினார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications