அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நலமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும், திமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருபவர் துரைமுருகன் (வயது 87). துரைமுருகனுக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் நேற்று முன் தினம் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் துரைமுருகனுக்கு நேற்று முன் தினம் திடீரென காதில் வலி ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து உடனடியாக அவர் சென்னையில் உள்ள காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்நோக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அமைச்சர் துரைமுருகனுக்கு தற்போது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திடீரென காதில் வலி ஏற்பட்டது வயது மூப்பின் காரணமாக ஏற்படும் பாதிப்பு தான் எனவும் இப்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
-
மருத்துவமனைகளில் ‘பவர் கட்’ கூடவே கூடாது.. தடையில்லா மின்சாரம் வழங்க மின் வாரியம் உத்தரவு! -
புதிதாக 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதியா? உண்மை இல்லையாம்.. மருத்துவத்துறை விளக்கம் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications