வெளிநாட்டு வேலை.. “உஷாரா” இருங்க! எச்சரிக்கும் அமைச்சர் மஸ்தான் - ஏமாறாமல் இருக்க இதை செய்யுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கம்போடியாவில் சிக்கிய 6 தமிழர்கள் தமிழ்நாடு அரசு உதவியால் இன்று நாடு திரும்பியுள்ள நிலையில் அவர்களை வரவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான், வெளிநாடுகளில் வேலை தேடி செல்பவர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுறுத்தி இருக்கிறார்.

அதன் பிறகு தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "வாழ்வாதாரங்களை தேடி அயல்நாடுகளுக்கு பணி நிமித்தமாக பலர் செல்கின்றனர், இதில் சிலருக்கு நல்ல வேலை கிடைக்கிறது, சிலருக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை.

 முதலமைச்சர் உத்தரவு

முதலமைச்சர் உத்தரவு

தற்போது கம்போடியா நாட்டில் நல்ல ஐடி வேலை வாங்கி தருவதாக தமிழர்களை அழைத்து சென்று இணைய மோசடியில் ஈடுபட வைத்துள்ளனர். 6 தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு உள்ளதாக முதலமைச்சருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

தற்போது தமிழ்நாடு அரசின் முழு செலவில் அவர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். போலி ஒப்பந்ததாரர்களை நம்பி இதுபோன்று வெளிநாட்டுகளுக்கு வேலை நிமித்தமாக பொதுமக்கள் செல்ல வேண்டாம். இதனை வலியுறுத்தி தொடர்ந்து வெளிநாடு துறை சார்பில் பல்வேறு வகையில் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

 போலி ஒப்பந்ததாரர்கள்

போலி ஒப்பந்ததாரர்கள்

போலி ஒப்பந்ததாரர்களை நம்பி வெளிநாடு சென்றால் இந்த நிலைதான் ஏற்படும் என்பதற்கு சான்றாக இவர்கள் உள்ளனர். வெளி நாட்டுக்கு வேலைக்கு செல்பவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் தாங்கள் எந்த நாட்டிற்கு வேலைக்காக எந்த ஒப்பந்ததாரர் மூலம் செல்கிறோம் என பதிவு செய்ய வேண்டும்

 அரசு நடவடிக்கை

அரசு நடவடிக்கை

இது போன்ற போலி ஒப்பந்ததாரர்களை கண்காணித்து தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தண்டையார்பேட்டையை சேர்ந்த புவனா என்ற பெண்மணி துபாயில் போலி ஒப்பந்ததாரரை நம்பி ஏமாற்றப்பட்டு உள்ளார். தற்போது அந்த பெண் அரசால் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளார்.

 அரசு ஏற்பாடு

அரசு ஏற்பாடு

அவரை துபாயில் இருந்து தமிழ்நாடு அழைத்து வருவதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று அயல்நாடுகளில் போலி ஒப்பந்ததாரர்களை நம்பி ஏமாறுபவர்கள் குறித்து அரசுக்கு தகவல் கிடைத்தால் அவர்களை தமிழ்நாடு அழைத்து வர அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது." என்றார்.

 பதிவது எப்படி?

பதிவது எப்படி?

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் Protector of Emigrants அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. அங்கு சென்று ஆவணங்களை சமர்பித்து இதற்காக பதிவு செய்ய வேண்டும். இந்த அலுவலகம் மூலம் வெளிநாடுகளில் வேலைக்கு அனுப்பும் நிறுவனங்களின் பட்டியலை அறியலாம். மத்திய அரசு அங்கீகரித்த நிறுவனத்தில் சென்றால் மட்டுமே அவர்களை மீட்க அரசு முழு பொறுப்பேற்கும்.

 போலி நிறுவனங்கள்

போலி நிறுவனங்கள்

மத்திய அரசிடம் பதிவு செய்த நிறுவனங்கள் ரூ.50 லட்சம் வரை டெபாசிட் செய்துள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் செல்லும் பயணிகள் வெளிநாட்டில் பிரச்சனையில் சிக்கினால் அவர்களை மீட்க மத்தி அரசு முயற்சிக்கும். சுற்றுலா விசா மூலம் வெளிநாடு சென்று பணிபுரியக்கூடாது என்றும், சமூக வலைதளங்கள், செய்தித்தாள் விளம்பரங்களை முழுமையாக நம்பி வெளிநாடு செல்வதை தவிர்க்கவும் ஏற்கனவே அரசு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+