திடீர் காய்ச்சல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி.. உடனே அமைச்சர்கள் விசிட்!
சென்னை : கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை திமுக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி ஆகியோர் சென்று சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்தனர்.
Recommended Video
திமுக துணைப் பொதுச் செயலாளரும், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமிக்கு கடந்த ஜூலை மாதம் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், அமைச்சராக இருப்பதால், அலுவல் பணிகளில் தொய்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உடனே சென்னை சென்றார் ஐ.பெரியசாமி.

சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். சமீபத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்துகொண்டார். இந்நிலையில், திண்டுக்கல் வந்த அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நலம் மீண்டு வருகிறது.
மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளுக்காகவும், ஆய்வுக்காகவும் வந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தகவல் அறிந்து, மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்து நலம் விசாரித்தார்.
மேலும், மருத்துவர்களிடமும், அமைச்சர் ஐ.பெரியசாமியின் உடல் நலம் குறித்துக் கேட்டறிந்தார். அவருடன் மதுரையைச் சேர்ந்த பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியும் அமைச்சர் ஐ.பெரியசாமியைப் பார்த்து நலம் விசாரித்தார். அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு பற்றி அறிந்த திமுக தொண்டர்கள், மருத்துவமனை முன்பு குவிந்தனர். அவர்களை நிர்வாகிகள், ஓரிரு நாட்களில் வீட்டுக்கு வந்துவிடுவார் எனக் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications