சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 கேபினட் அமைச்சர் பதவி வேண்டுமாம்.. டெல்லிக்கு தூது விட்டிருக்கு திமுக.. ஜெயக்குமார் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

சென்னை: 5 கேபினட் அமைச்சர் பதவி கொடுத்தால் போதும் என டெல்லிக்கு திமுக தூது விட்டிருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தலை தமிழகம் சந்தித்துள்ளது. இந்த நிலையில் மோடிக்கு ஆதரவாக ஓர் அணியும் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவுடன் இன்னொரு அணியும் உள்ளது.

இந்த இரு அணிகளுக்கு மாற்றாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றொரு அணியாக 3-ஆவது அணியை உருவாக்க முயற்சித்து வருகிறார். முதலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் ஆதரவு கோரினார்.

அமமுகவை இந்த விஷயத்தில் மட்டும் அதிமுக, திமுக அடிச்சுக்க முடியாது.. அடிச்சுக்கவே முடியாது! அமமுகவை இந்த விஷயத்தில் மட்டும் அதிமுக, திமுக அடிச்சுக்க முடியாது.. அடிச்சுக்கவே முடியாது!

சந்திப்பு

சந்திப்பு

தேர்தலுக்கு பிறகு கேரள முதல்வர் பினராயி விஜயனை ராவ் சந்தித்து பேசிவிட்டு இன்று ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சவாரி செய்யும்

சவாரி செய்யும்

இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைகாட்சி சேனலுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது போல் ஒரே நேரத்தில் இரு படகுகளில் திமுக சவாரி செய்யும்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

5 கேபினட் அமைச்சர்கள் பதவி கேட்டு டெல்லிக்கே தூதுவிட்டுள்ளது திமுக என விமர்சனம் செய்துள்ளார். இவரது கருத்தின் மூலம் இவர் எந்த கட்சியை குறிப்பிடுகிறார் என தெரியவில்லை. அதாவது 5 கேபினட் அமைச்சர் பதவி கொடுத்தால் ஆதரவு என பாஜக, காங்கிரஸிடம் திமுக டீல் பேசியுள்ளதா என தெரியவில்லை.

தெரியவில்லை

தெரியவில்லை

மேலும் உள்ளூர் கட்சிகளுடன் கூட்டு வைப்பதை காட்டிலும் மாயாவதி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் ஆகியோருடன் கூட்டு வைத்துக் கொண்டு ஒரு வேளை அவர்கள் 5 கேபினட் அமைச்சர் பதவியை கொடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஆதரவு அளிக்க திமுக முடிவு செய்துள்ளதா என்பதும் தெரியவில்லை.

கேள்வி

கேள்வி

அடுத்த பிரதமருக்கான வேட்பாளர் யார் என்பது குறித்து வரும் 21-ஆம் தேதி காங்கிரஸ் ஆலோசனை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் மம்தாவும் மாயாவதியும் கலந்து கொள்ளவில்லை. இதிலிருந்து அவர்கள் இருவரும் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது என்பதால் திமுக அந்த பக்கம் தாவுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திமுக பேரம்

திமுக பேரம்

மேலும் கேசிஆருடனான சந்திப்பில் 5 கேபினட் அமைச்சர் பதவிக்கு அவர் ஒப்புக் கொண்டால் மற்றவர்களுடன் இணைந்து காங்கிரஸ்- பாஜக அல்லாத புதிய அணியை உருவாக்க ஸ்டாலின் உதவுவாரா என்பது போக போகத்தான் தெரியும். திமுக எல்லோருடனும் பேரம் பேசி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் பேசியதை பார்க்கும் போது இதையெல்லாம் யோசிக்க வேண்டியதாயிற்று.

English summary
Minister Jayakumar accuses DMK that it talks with all the national parties to get 5 Cabinet Minister post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X