அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும்! இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை! மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!
சென்னை : கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து கிட் டெண்டர் விவகாரத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிடில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
Recommended Video
திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அண்ணாமலை வெளியிட்டார். ஆனால் திமுக அதனை திட்டவட்டமாக மறுத்த நிலையில், அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து தொகுப்புக்கான ஒப்பந்தம் பாலாஜி சர்ஜிக்கல் நிறுவனத்துக்கு தமிழக அரசு தந்துள்ளது. குறிப்பாக ஊழல் நடந்திருப்பதாக அண்ணாமலை புகார் கூறிய நிறுவனத்துக்கு டெண்டர் தரப்படவில்லை.

அண்ணாமலை பாஜக
இதற்கிடையே கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து கிட் டெண்டர் விவகாரத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிடில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்," கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் ஒப்பந்தத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காழ்ப்புணர்ச்சியுடன் அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரம் இருந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்திருக்கப்படும். குறைகள் இருந்தால் களையப்படும். அதைவிடுத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம். தற்போது கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் ஒப்பந்தம், அண்ணாமலை கூறியதுபோல, அனிதா டெக்ஸ்கார்ட் நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை.

ஊட்டச்சத்து கிட் டெண்டர்
பாலாஜி சர்ஜிக்கல் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அனிதா டெக்ஸ்கார்ட் நிறுவனத்திற்குதான் தரப்போகிறார்கள் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசின் மீது சுமத்தியது எந்த அளவுக்கு நியாயம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆதாரத்துடன் கூறினால், தவறு நடந்து இருந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் ஏற்கெனவே தெரிவித்து இருந்தேன்.

சட்டபூர்வமான நடவடிக்கை
அண்ணாமலை சொன்ன நிறுவனம் 2வது இடத்திற்கு போய்விட்டது. எனவே, முதல் இடத்தில் உள்ள நிறுவனத்திற்குதான் இந்த பணி ஆணை வழங்கப்படும். இதை டெண்டர் கமிட்டி இறுதி செய்யும். எனவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன் வைத்ததற்கு அண்ணாமலை நாகரிகமான முறையில் வருத்தமாவது தெரிவிக்க வேண்டும் அல்லது துறையின் அடிப்படையில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்." என கூறினார்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
அரசு பள்ளி முட்டை.. ₹3.70க்கு வாங்கி ₹5.63 விற்பனை. விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை -
பெருந்துறை இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? பாஜகவில் செல்வாக்கை நிரூபிக்க ஆசிட் டெஸ்ட்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications