அத்திக்கடவு -அவினாசி திட்டப் பணிகள் இந்த மாதம் இறுதியில் நிறைவடையும் - அமைச்சர் முத்துசாமி
சென்னை: அத்திக்கடவு அவினாசி திட்டப் பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் நிறைவடையும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு சோதனை ஓட்டத்துக்கு கூடுதலாக 10 நாட்கள் தேவைப்படுவதால் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
அவினாசி அத்திக்கடவு திட்டத்தை பொறுத்தவரை கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் கனவுத் திட்டமாக பார்க்கப்படுகிறது.

அவினாசி அத்திக்கடவு
அத்திக்கடவு அவிநாசி திட்டம் கொங்கு மண்டலத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஏரி, குளங்கள் அனைத்தையும் தண்ணீர் நிரப்புகின்ற திட்டம். அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை செறிவூட்டு மேம்படுத்துகின்ற திட்டம். குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு உள்ள தண்ணீர் பற்றா குறையை போக்குகின்ற திட்டம்.

தொடர் போராட்டங்கள்
முதன்முதலாக 1957 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்த மாரப்ப கவுண்டர் இந்த திட்டத்திற்கான கோரிக்கை வைத்தார். 60 ஆண்டு காலமாக இத்திட்டம் கிடப்பில் இருந்த நிலையில், தேர்தல் கால வாக்குறுதி திட்டமாகவே மட்டும் இருந்து வந்தது. இதையடுத்து பல்வேறு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

திட்டம் தொடக்கம்
இதையடுத்து 2016- 17 ஆம் ஆண்டில் அவினாசி அத்திக்கடவு திட்டம் அறிவிக்கப்பட்டு 2017-18 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டது. பிறகு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டு திட்டம் துவங்கப்பட்டது. இந்நிலையில் ஒரு வழியாக இந்த மெகா திட்டப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியளித்துள்ள அமைச்சர் முத்துசாமி, அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகளானது இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்ற உறுதியை கொடுத்திருக்கிறார்.

சோதனை ஓட்டம்
அதுமட்டுமல்லாமல் சோதனை கால ஓட்டத்துக்கு கூடுதலாக அதிகாரிகள் தரப்பில் 10 நாட்கள் கேட்கப்பட்டுள்ளதால் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். தற்போதைய நிலவரப்படி 6 பம்பிங் ஸ்டேஷன்களும் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications