வரவுக்கேற்ற செலவு செய்ய வேண்டும்; வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் -நிதி அமைச்சர் PTR
சென்னை: ஒவ்வொருவரும் வரவுக்கேற்ற செலவு செய்ய வேண்டும் என்றும் வருமானத்தில் ஒரு பகுதியை அவசியம் சேமிக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
உலக சிக்கன தினத்தை ஒட்டி நிதி அமைச்சர் என்கிற முறையில் பொதுமக்களுக்கு அவர் இதை அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள உலக சிக்கன நாள் செய்தியில்;

சிக்கனம் தேவை
உலக சிக்கன நாள் நாள் இன்று தமிழகமெங்கும் கொண்டாடப்படுவது குறித்து பெருமகிழ்ச்சி அடைவதுடன் என் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் 1985ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 30-ம் நாள் உலக சிக்கன தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிக்கன நடவடிக்கையைக் கடைப்பிடித்து, சிக்கனமாக வாழ்ந்து, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதையே இந்த உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது.

திருக்குறள்
"ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை" -- என்ற திருக்குறளுக்கேற்ப வரவுக்குள் செலவு செய்து, சிக்கனமாக வாழ வேண்டும் என்பதுடன் மனித வாழ்க்கையில் சேமிப்பின் முக்கியத்துவத்தையும் திருவள்ளுவர் விளக்கியுள்ளார். சிறுகச் சிறுகச் சேமிப்பதன் மூலம் குடும்பத்திற்குத் தேவைப்படும் அவசரத் தேவைகளை, எளிதில் எதிர்கொள்ளலாம். பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வீடு கட்டுதல் போன்ற செலவினங்களைக் கடன் வாங்காமல் மேற்கொள்ளலாம்.

சேமிப்புத் திட்டங்கள்
ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயில், ஒரு பகுதியைப் பாதுகாப்பான வழியில் சேமிப்பதுதான் சிறந்தது. மக்கள் தங்களது சேமிப்புத் தொகையைப் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்தால்தான், அவர்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அவ்வாறு முதலீடு செய்த பணத்தைத் தக்க தருணத்தில் திரும்பப் பெற முடியும். இந்த வகையில் அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சிறு சேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பானவை.

அஞ்சலகம்
தமிழக மக்கள் அனைவரும் அருகிலுள்ள அஞ்சலகத்தில் பாதுகாப்பான அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து பயன் பல பெற்றிட, இந்த உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சிறுசேமிப்பு பழக்கம் நாளுக்கு நாள் கால சூழ்நிலைகள் காரணமாக மறைந்து வரும் நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் இந்த கோரிக்கை சிந்தித்து பார்த்து செயல்படுத்த வேண்டிய ஒன்றாக கருதப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications