“தமிழ்நாட்டில் பிரிவினை சக்திகள்.. இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்” - அமைச்சர் சேகர்பாபு
சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரம் தமிழ்நாட்டில் அரசியல் சலசலப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பக்தியை வைத்து பகை வளர்க்க கூடாது என்றும், தமிழ்நாட்டில் பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் கோரியுள்ளன. ஆனால், அது தீப தூண் கிடையாது, நில அளவை கல் தூண் என்று பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த உத்தரவை அமல்படுத்த கோரி பாஜக, இந்துத்துவா அமைப்புகள் முன்னெடுத்த போராட்டம் கலவரமாக வெடித்திருக்கிறது. இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்திருக்கிறது. இந்நிலையில், "தமிழ்நாட்டில் பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்" என்று அமைச்சர் சேகர்பாபு எச்சரித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இது குறித்து பேசியதாவது, "பக்தியை வைத்து பகை வளர்க்கக்கூடாது. சமாதானம் என்பதுதான் இறை கொள்கை, சனாதனம் என்பதல்ல. வடக்கே இது போன்ற விரும்பத்தகாத சூழல்களை ஏற்படுத்தி, அரசியல் மாற்றத்தை உருவாக்கியதை போல், தமிழகத்திலும் உருவாக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
இது ராமானுஜர் வாழ்ந்த மண். எல்லோருக்கும் எல்லாமும் ஆகிய மண். அதுமட்டுமல்ல, ஒரு காலத்தில் வல்லபாய் பட்டேலை இரும்பு மனிதர் என்று போற்றுவார்கள். இன்றைக்கு இந்தியாவே உற்று நோக்குகின்ற இரும்பு மனிதனாக இருக்கின்றார் தமிழக முதல்வர். இந்த ஆட்சியில் பிரிவினை என்பது என்னாலும் எடுபடாது. பிரிவினை சக்திகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.
தமிழகத்தை பொறுத்த அளவில், இந்த அரசு எல்லோருக்கும் எல்லாமும் ஆன அரசு. எந்தெந்த மதத்தினர் அவரவர் வழிபாட்டினை எப்படி எல்லாம் விரும்புகிறார்களோ, அப்படியான சூழ்நிலையில் கட்டுப்பாடோடு, ஒழுக்க நிலை தவறாமல் வழிபட விரும்புகின்ற அந்தந்த மதத்தினருக்கு தேவையான பாதுகாப்பு, பொது அமைதியையும் ஆகியவற்றை ஏற்படுத்தி தருவதுதான் இந்த ஆட்சியின் கொள்கை லட்சியம். அந்த வகையில் இந்த ஆட்சியை ஆன்மீக ஆட்சி என்று கூறாதவர்கள், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி காண்பதெல்லாம் மஞ்சளாக தெரியுமோ, அது போல் இந்த ஆட்சியின் மீது குறை கூறுபவர்கள் இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications