அவர்தான் அப்பவே சொன்னாரே யாராச்சும் கேட்டீங்களா? எச் ராஜாவை மறைமுகமாக சீண்டிய அமைச்சர் உதயநிதி
சென்னை: "அவர்தான் அப்பவே சொன்னாரே யாராச்சும் கேட்டீங்களா என பாஜக பிரமுகர் எச் ராஜாவின் பெயரை குறிப்பிடாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரை சீண்டியுள்ளார். பாஜக பிரமுகர் ஒருவர் ஒரு ஆண்டிற்கு முன்பு சொன்ன நிகழ்வு தற்போது நிரூபணம் ஆகியுள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் கட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் பிறகு திமுக நிர்வாகிகளுடன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் அவர் பேசுகையில் ஒரு ஆண்டிற்கு முன்பே பாஜகவை சேர்ந்த ஒருவர் அவரது கட்சி விழாவில் ஸ்டாலின் கருணாநிதியை விட ஆபத்தானவர் (Stalin is more dangerous than Karunanidhi) என கூறியிருந்தார்.

செயல்
அதை தன்னுடைய செயலாலும் சொல்லாலும் அறிவிக்கும் திட்டங்களாலும் முதல்வர் ஸ்டாலின் நிரூபித்துக் காட்டியுள்ளார். இதற்கு கடந்த 9ஆம் தேதி நடந்த நிகழ்வே சாட்சி. அந்த நிகழ்வு இந்திய அளவில் டிரென்டிங் ஆகியுள்ளது. அனைத்து முதல்வர்களும் அது குறித்து பேசி வருகிறார்கள்.

பாஜக பிரமுகர்
இன்று அதே பாஜக பிரமுகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் "நான் தான் ஒன்றரை ஆண்டு முன்னாடியே சொன்னேனே! கேட்டீங்களா? என கூறியுள்ளார். அந்த நிலைமையில் இருக்கிறது என சிரித்துக் கொண்டே அமைச்சர் உதயநிதி கூறியிருந்தார். கடந்த 9ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஆளுநர் ஆர் என் ரவியின் உரையுடன் தொடங்கியது.

அரசு தயாரித்த உரை
ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் அந்த உரையில் திராவிட மாடல், தமிழ்நாடு, சமத்துவம், பெண்ணுரிமை, பல்லுயிர் ஓம்புதல், சமூகநீதி, மதநல்லிணக்கம் உள்ளிட்ட வார்த்தைகள் அடங்கிய பத்தியை படிக்காமல் விட்டுவிட்டார்.

அரசியல் சாசனம்
அது போல் அதே பத்தியில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகியோரின் பெயர்களையும் தவிர்த்தார். அரசியல் சாசனத்தை வடிவமைத்த அம்பேத்கரின் பெயரையே ஆளுநர் தவிர்த்திருப்பது வேதனையை தருவதாக சபாநாயகர் அப்பாவு தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆளுநர் உட்கார்ந்திருந்த போதே அவர் உரையை முழுமையாக படிக்கவில்லை என கூறி அவர் வாசித்த உரை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றும் அரசு தயாரித்த உரையே அவைக் குறிப்பில் ஏற்றப்பட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் சட்டவிதி எண் 17 ஐ தளர்த்தி தீர்மானம் கொண்டு வந்தார்.

முதல்வர் ஸ்டாலின்
இதை அறிந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார். இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலினை திமுகவும் கூட்டணி கட்சியினரும் கொண்டாடி வருகிறார்கள். அது போல் முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருந்த போதே அவையை விட்டு சிங்கம் போல் வெளியேறிவிட்டதாக பாஜகவினர் ஆளுநர் ஆர்.என்.ரவியை நினைத்து பெருமிதம் கொள்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கை
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கை குறித்து பாஜக மூத்த தலைவரான எச் ராஜா சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஒரு கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் சட்டசபையில் ஆளுநர் உரையின் போது அவர் மட்டுமே பேச வேண்டும் என்பது மரபு. ஆனால் அதற்கு மாறாக முதல்வர் பேசியது மரபு அல்ல. ஆளுநர் அவ்வையார், பாரதியாரின் கவிதைகளை வாசித்தது அவைக் குறிப்பில் இருக்காது என்கிறார்கள். இதுதான் திராவிட மாடலா, அமைதி பூங்காவா?

ஸ்டாலின் ஆபத்தானவர்
நான் ஏற்கெனவே Stalin is more dangerous than Karunanidhi என கடந்த ஆண்டே சொன்னதை தற்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின் நிரூபித்து வருகிறார். முதல்வர் ஸ்டாலின் முதிர்வில்லாத முதல்வர் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. தன்னுடைய நடவடிக்கைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்பார். தன்னை திருத்திக் கொள்வார் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.
-
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications