இனி நடிக்க மாட்டேன்.. மாமன்னன்தான் கடைசி.. கமல் படத்திலிருந்து விலகல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கமல் படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் 35 ஆவது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். மாமன்னன்தான் கடைசி படம். கமல் தயாரிப்பில் நடிப்பதாக இருந்த படத்திலிருந்து விலகிவிட்டேன்.

வாரிசு அரசியல்
வாரிசு அரசியல் என்ற என் மீதான விமர்சனங்களுக்கு செயல் மூலம் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பேன். தமிழகத்தை விளையாட்டு தலைநகரமாக மாற்றுவேன். அனைத்து மாவட்டங்களிலும் மினி ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்ததுமே வாரிசு அரசியல் தலைத்தூக்கும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்தன.

திமுக தலைவராக கருணாநிதி
திமுக தலைவராக கருணாநிதி இருந்த போது ஆட்சியிலும் சரி கட்சியிலும் சரி அவருடைய மகன் ஸ்டாலின், மு.க.அழகிரி, மகள் கனிமொழி, அக்கா மகன் தயாநிதி மாறன் என அங்கம் வகித்தனர். இவர்கள் மட்டுமல்லாமல் டி.ஆர்.பாலு மகன் டி.ஆர்.பி ராஜா, அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம், அமைச்சர் துரைமுருகனின் மகன் வேலூர் எம்பி கதிர் ஆனந்த், அமைச்சர் ஐ பெரியசாமியின் மகன் ஐ.பி. செந்தில் குமார் என இரண்டாம் கட்ட தலைவர்கள் மத்தியிலும் வாரிசு அரசியல் தலை தூக்கியது.

உதயநிதி ஸ்டாலின்
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி குறித்த பேச்சு எழுந்தது. ஸ்டாலின் கூட மேயராக இருந்து எம்எல்ஏ, அமைச்சர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என படிப்படியாக உயர்ந்து இந்த நிலையை அடைந்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியும் அப்படித்தான் ஸ்டாலினின் வளர்ச்சி, செயலாக்கத்தை கண்டுதான் பதவிகளையும் பொறுப்புகளையும் கொடுத்தார்.

முதல்வர் ஸ்டாலின்
ஆனால் முதல்வர் ஸ்டாலினோ தனது மகனுக்கு கட்சிக்காக உழைத்தார் என்ற ஒரே தகுதியை வைத்துக் கொண்டு தற்போது அமைச்சராக்கிவிட்டார் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதைத்தான் உதயநிதி, வாரிசு அரசியல் விமர்சனத்திற்கு செயல்கள் மூலம் பதிலடி கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின், இந்த அமைச்சர் பதவியை பதவியாக எண்ணாமல் எனக்கு கிடைத்துள்ள பொறுப்பாக கருதுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

கமல், ரஜினி மீது விமர்சனம்
ஏற்கெனவே கமல்ஹாசன், ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து பேசும் போது படத்திலும் நடித்துக் கொண்டு அரசியலை இவர்கள் எப்படி கவனிப்பார்கள், இரட்டை குதிரையில் எப்படி சவாரி செய்ய போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. அதே போன்றதொரு கேள்வி உதயநிதிக்கும் வந்தது. உதயநிதி கையில் 3 படங்களும், கமல் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிப்பதாக இருந்தது. இந்த நிலையில்தான் மாமன்னன்தான் எனது கடைசி படம் என உதயநிதி அறிவித்துவிட்டு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
ஸ்டாலின் ஆரம்பித்த ஆட்டம்.. பின்னணியில் பாஜகவா? அப்ப ஒன்று சேர போறாங்களா? அதிர்ச்சியில் காங்கிரஸ் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications