சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கன்னியாகுமரி பாட்டியின் பொக்கை வாய் சிரிப்பை.. புகைப்படமாக்கிய போட்டோகிராபருக்கு ஸ்டாலின் பாராட்டு

Google Oneindia Tamil News

சென்னை: ரேஷன் கடைகளில் ரூ 2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பை பெற்று சிரித்தபடியே போஸ் கொடுத்து வைரலான பொக்கை வாய் சிரிப்பு பாட்டியை புகைப்படமாக எடுத்து பரிசளித்த போட்டோ கிராபருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஊருக்கே குழந்தை மாதிரி.. ஒரு நாளில் வைரலான Velammal பாட்டி | Jackson Herby | Oneindia Tamil

    கொரோனா நிவாரணமாக ரூ 4000 பணமானது இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டது. இதனால் கொரோனா காலத்தில் வேலையில்லாமல் தவித்த நிறைய பேருக்கு பேருதவியாக இருந்தது.

    இந்த நிலையில் ரேஷன் கடையில் இரண்டாவது தவணையாக ரூ 2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பை பெற்ற பாட்டியின் புகைப்படம் வைரலானது. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம் என அனைவரும் பாட்டியின் புகைப்படத்தை வைரலாக்கினர்.

     தமிழகத்தில் மூவருக்கு டெல்டா +.. உயிரிழப்பை தடுக்க இது மட்டுமே ஒரே வழி.. ஆய்வாளர்கள் தரும் விளக்கம் தமிழகத்தில் மூவருக்கு டெல்டா +.. உயிரிழப்பை தடுக்க இது மட்டுமே ஒரே வழி.. ஆய்வாளர்கள் தரும் விளக்கம்

    நாகர்கோவில்

    நாகர்கோவில்

    இந்த நிலையில் இந்த பாட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் (90) என தெரியவந்தது. இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்த பாட்டி அவரது ஊரில் ரேஷன் கடையில் ரூ 2000 மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை வாங்கி வந்தார்.

    புகைப்படக் கலைஞர்

    புகைப்படக் கலைஞர்

    அப்போது அவரிடம் ஒரு நாளிதழின் புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி பாட்டியிடம் மெல்ல பேச்சு கொடுத்து வாங்கிய பணத்தை காண்பிக்குமாறு கேட்க, பாட்டியோ ரூ 2000த்தை காண்பித்து அழகாக தனது பொக்கை வாயில் சிரித்தார். இதை ஜாக்சன் அப்படியே கிளிக் செய்தார். இந்த புகைப்படம் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் வைரலானது.

    அழைப்பு

    அழைப்பு

    இதை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தனர். தனது ஆட்சி எப்படி இருக்கிறது என்பதை இந்த பாட்டியின் சிரிப்பின் மூலம் உலகிற்கு உணர்த்திய போட்டோகிராபர் ஜாக்சனை தனது அலுவலகத்திற்கு அழைத்திருந்தார் முதல்வர்.

    புகைப்படம் பரிசு

    புகைப்படம் பரிசு

    அப்போது அந்த பாட்டியின் புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு ஜாக்சன் பரிசாக கொடுக்க அவர் பாராட்டினார். தமிழக முதல்வருக்கு ஒரு நாளாவது புகைப்பட கலைஞராக வேண்டும் என்பது தனது ஆசை என்பதை ஜாக்சன் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

    English summary
    MK Stalin praises Phtographer Jackson Herby for taking photograph of Kanniyakumari old lady.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X