மொதல்ல போஸ்டர் ஒட்டுறத நிறுத்தணும்.. ஜெயக்குமார் நினைத்தால் அதிமுக ஒன்றுபடும்.. நயினார் நாகேந்திரன்
சென்னை: அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்த இயக்கமாக செயல்பட வேண்டும் என சேலத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் தனித்தனியே போஸ்டர் ஒட்டி தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் நேற்று முன் தினம் முதல் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்ததிலிருந்து ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிச்சாமியும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

அதிமுக ஒற்றுமை
இந்த நிலையில் அதிமுக ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கேபி இராமலிங்கத்தின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதிமுக இயக்கம்
அப்போது அவர் கூறுகையில், அதிமுக இயக்கம் மாபெரும் இயக்கம். மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எளிய மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சில மாற்றங்கள் ஏற்பட்டன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தவன் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்.

எண்ணம்
எங்களுடைய கட்சியின் எண்ணமும் அதுவாகத்தான் இருக்கிறது. அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை எல்லாம் விட்டுவிட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நான் மிகவும் மதிக்கக் கூடிய மனிதர். இந்த கழகம் ஒற்றுமையாக செயல்பட அவர் பேச வேண்டும்.

போஸ்டர்கள்
போஸ்டர்கள் அடிப்பதை நிறுத்திவிட்டு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்றார். ஜெயலலிதா காலத்தில் நயினார் நாகேந்திரன் 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை மின்சாரத் துறை, தொழில்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட இலாகாக்களின் அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா மறைந்தவுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications