சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மிதமான மழை
சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
வடகிழக்கு பருவமழைக்காலத்தில், 1.10.2021 முதல் 20.11.2021 வரை தமிழ்நாட்டில் 518.99 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 68 சதவிகிதம் கூடுதல் ஆகும். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மாநில சராசரி 6.59 மில்லி மீட்டர். திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 39.91 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

வடக்கு தமிழ்நாட்டில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தெற்கு கர்நாடகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு தமிழ்நாடு, ராயல்சீமா பகுதியில் நிலவுகிறது என்றும், இது மேற்கு வடமேற்காக நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று நீலகிரி, ஈரோடு, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். 21.11.2021 - அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கொட்டித்தீர்த்த கனமழையால் அணைகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. உபரி நீராக முக்கிய நீர்த்தேக்கங்களான, மேட்டூர் அணையிலிருந்து 65,000 கன அடியும், பூண்டியிலிருந்து 29,684 கன அடியும், செங்குன்றத்திலிருந்து 660 கன அடியும், சோழவரம் ஏரியிலிருந்து 400 கன அடியும், செம்பரம்பாக்கத்திலிருந்து 361 கன அடியும் திறந்து விடப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 குழுக்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குழுவும், வேலூர் மாவட்டத்தில் 2 குழுக்களும் மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையேவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உபரி நீராக முக்கிய நீர்த்தேக்கங்களான, மேட்டூர் அணையிலிருந்து 65,000 கன அடியும், பூண்டியிலிருந்து 29,684 கன அடியும், செங்குன்றத்திலிருந்து 660 கன அடியும், சோழவரம் ஏரியிலிருந்து 400 கன அடியும், செம்பரம்பாக்கத்திலிருந்து 361 கன அடியும் திறந்து விடப்படுவதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். சென்னை மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 குழுக்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குழுவும், வேலூர் மாவட்டத்தில் 2 குழுக்களும் மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications