“முதலமைச்சர் ஸ்டாலினை.. மோடியால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது!” - ராகுல் காந்தி
சென்னை: லோக்சபாவில் நேற்று மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட, தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது சட்டத்திருத்த மசோதாவை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து தோற்கடித்துள்ளன. இந்நிலையில் இன்று தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ராகுல் காந்தி, முதலமைச்சர் ஸ்டாலினை, மோடியால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வரும் நிலையில், ராகுல் காந்தியின் பேச்சு கவனம் பெற்றிருக்கிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், அரசியல் தலைவர்கள் தீயாய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ராகுல் காந்தி மட்டும் ஆள் வரவில்லை. தேர்தல் நெருங்க நெருங்க.. திமுகவினரிடமிருந்தும், கூட்டணி கட்சியினரிடமிருந்தும் இது குறித்து கேள்விகள் வந்தன. இதனையடுத்து இன்று ராகுல் காந்தி தமிழகத்தில் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார்.
பொன்னேரியில் காலை பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அதனை தொடர்ந்து சோளிங்கரில் பரப்புரை மேற்கொண்டார். அதில் அவர் பேசியதாவது, "அமித்ஷாவும், மோடியும் தமிழக மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இப்படி செய்ய அவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய அதிமுக இப்போது எங்கு இருக்கிறது? அதை பாஜக முழுமையாக கைப்பற்றிவிட்டது. இனி அதிமுக என்கிற கட்சியே இருக்காது.
பாஜகவின் கருவியாக மட்டுமே அதிமுக இருக்கிறது. தமிழ்நாட்டில் நுழைய அதிமுகவை பாஜக பயன்படுத்துகிறது. தமிழ்நாடு என்கிற சிந்தனையை பாஜக நசுக்கப்பார்க்கிறது. நாங்களும்தான் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தோம். ஆனால், நாங்கள் தமிழ்நாட்டை ஆள நினைக்கவில்லை. தமிழ்நாட்டை டெல்லியிருந்து யாரும் முகமூடி அணிந்துக்கொண்டு ஆள முடியாது.
அப்படியே கூட்டணி விஷயத்திற்கு வருவோம். நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். ஆனால், நாங்கள் எந்த வகையிலும் திமுக மீது தாக்குதல் நடத்தவில்லை. அங்கு அப்படியா நடக்கிறது? என்டிஏ கூட்டணியில் அதிமுக மீது பாஜக தாக்குதல் தொடுக்கிறது. அதிமுகவின் தலைமையை பாஜக கட்டுக்குள் வைத்திருக்கிறது. அதிமுக மூலம் தமிழ்நாட்டில் நுழைய பாஜக முயற்சிக்கிறது.
மோடியை டிரம்ப் கட்டுப்படுத்துகிறார். தமிழ்நாட்டை அதிமுக மூலம் கட்டுப்படுத்த நினைக்கிறார் மோடி. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினை மோடியால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. அவர் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்த முடியாது. அவர் இங்கு சுதந்திரமாக ஆட்சி செய்கிறார்" என்று பேசியிருக்கிறார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம்











Click it and Unblock the Notifications