சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவை மத்திய அரசு கையாண்ட விதம்தான்... தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளது.. சிதம்பரம் சுளீர்

Google Oneindia Tamil News

சென்னை: மோடி அரசு கொரோனாவை கையாண்ட விதம் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளதாகத் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணி அமைய இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கலாம் என்றார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அசாம் மாநிலத்தில் மட்டும் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. மேற்கு வங்கத்தில் எதிர்பார்த்த அளவு வெற்றியை பாஜகவால் பெற முடியவில்லை, கேரளாவில் ஒயிட்வாஷ் ஆன பாஜக, தமிழகம் மற்றும் புதுவையில் ஒற்றை இலக்கிலேயே தொகுதிகளை கைபற்றியது.

Modi government corona management impacted Assembly poll result says Chidambaram

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம் கூறுகையில், "மத்திய அரசை நடத்த பாஜக ஏற்ற கட்சி என்ற பிம்பம், நரேந்திர மோடி அரசு கொரோனா தொற்று கையாண்ட விதத்தால் தேசமடைந்துள்ளது. இது தான் சட்டசபை தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்துள்ளது.

நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் மூன்றில் எதிர்க்கட்சிகளும் பிராந்தியக் கட்சிகளும் பாஜகவை தோற்கடிக்கத்துள்ளது. தேசிய அளவில் இதேபோன்ற ஒரு வலுவான கூட்டணி அமைய இது ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கலாம்" என்றார்.

எல்லா பக்கமும் நெருக்கும் தலைகள்.. அடுத்தடுத்த சரிவு.. மோடி - அமித் ஷா இணைக்கு எல்லா பக்கமும் நெருக்கும் தலைகள்.. அடுத்தடுத்த சரிவு.. மோடி - அமித் ஷா இணைக்கு "அடி".. பின்னணி

இந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸின் செயல்பாடு குறித்துப் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் முக்கிய சிக்கல் அதன் தலைமையில் இல்லை. அமைப்பு ரீதியான பலவீனங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும். கட்சித் தலைமை இங்கிருக்கும் பிரச்சினைகளைச் சரி செய்ய வேண்டும்" என்றார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த 23 தலைவர்கள், கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாததே முக்கிய பிரச்சினை என்றும் உடனடியாக தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இடைக்கால தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Chidambaram's latest interview about Coronavirus and Modi government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X