Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஐயோ சாமி.. ஆளைவிடு” மோடி 'ஸ்ட்ராங்' மெசேஜ்.. எடப்பாடிக்கு நோ சான்ஸ்!? தெறிக்கவிடும் ஓபிஎஸ் டீம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரில் பாஜக தலைமை யாரை ஆதரிக்கிறது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஒருபக்கம் மத்திய அரசின் அமைச்சகங்கள் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்புகின்றன. ஆனால், ஓ.பன்னீர்செல்வம், தானே பாஜக தலைமைக்கு நெருக்கமானவர் எனக் காட்டிக் கொள்கிறார். இந்நிலையில், "பிரதமர் மோடி ஸ்ட்ராங்கா இருக்காரு.. அவர் எடப்பாடிக்கு சாதகமாக ஒண்ணும் பண்ண மாட்டாரு" என உறுதியாக கூறுகிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி.

அதிமுகவில் ஏற்பட்ட ஈபிஎஸ் - ஓபிஎஸ் பிளவைத் தொடர்ந்து, ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்கி, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் யாரை அங்கீகரிக்கிறது என்பதை விட பாஜக தலைமை யாரை அங்கீகரிக்கிறது என்பதுதான் முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் இரண்டு அமைச்சகங்கள் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பின. இதற்கு ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது. அதனை ஓபிஎஸ் தரப்பு வரவேற்ற நிலையில், ஈபிஎஸ் அணியினர் கடிதத்தை ஏற்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் அவரைச் சந்தித்து கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி இன்று ஆலோசித்தார். அப்போது கரூர் மாவட்ட செயலாளர்கள் உடனிருந்தனர்.

லவ் லெட்டரா?

லவ் லெட்டரா?

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, "ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஏற்க மறுத்துள்ளனர். அரசு தரப்பில் அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்ப வேண்டும் என்பது தான் நடைமுறை. இது என்ன காதல் கடிதமா? வாங்க மாட்டேன் என திருப்பி அனுப்புவது.‌ இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில் தான் மாநில தேர்தல் ஆணையர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கடிதம் அனுப்பி உள்ளார். எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தான் தொடர்கின்றனர்.

ஒரு சேர் கூட இருக்காது

ஒரு சேர் கூட இருக்காது

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு மத்திய அமைச்சகம் சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமியை குறிப்பிட்டு அனுப்பியது முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரையின் தூண்டுதலின் காரணமாகவே. திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக தொடர்ந்தால் அதிமுகவில் ஒரு சேர் கூட மிச்சம் இருக்காது. சொத்துகள் அனைத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தான் விடுவார்கள்" என விமர்சித்தார்.

பிடிவாதம்

பிடிவாதம்

மேலும் பேசிய புகழேந்தி, "ஜெயலலிதாவால் முதலமைச்சராக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுகவிற்கு தலைமையேற்க வேண்டும் என்ற குரல்தான் நாடெங்கும் ஒலிக்கிறது. முதுகில் குத்தும் துரோகி எடப்பாடி பழனிசாமியை யாரும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். கட்சியில் எல்லோரும் இணைந்து செல்ல வேண்டும், இல்லையென்றால் கட்சி போய்விடும் என்றுதான் ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். ஆனால், இந்த நேரம் வரை எடப்பாடி பழனிசாமி அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என பிடிவாதம் பிடித்து வருகிறார். அந்த புறாத்தலையனை விட்டு பிரஸ் மீட்டில் யாரையும் சேர்த்துக்கொள்ள முடியாது என பேச வைத்து வருகிறார்.

சசிகலா காலில் விழாதவர் யார்

சசிகலா காலில் விழாதவர் யார்

நான் ஜெயக்குமாரை பார்த்து ஒன்றே ஒன்று கேட்கிறேன். பாவம் செய்யாதவர்கள் எவரோ அவர் இந்தப் பெண் மீது கல்லெறியுங்கள் என்றாராம் இயேசு. உடனே அத்தனை பேரும் கல்லெறிவதை நிறுத்தி விட்டார்களாம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் திருட்டுக் கூட்டத்தில் யாராவது ஒருவர் விகே சசிகலா காலில் விழாமல் இருந்திருந்தால் இன்று சசிகலாவை பற்றி தவறாகப் பேசலாம், அவரை கட்சியில் சேர்க்க முடியாது எனப் பேசலாம். ஒரே ஒருவர் ஈபிஎஸ் அணியில் இருந்து வரட்டும். எடப்பாடி பழனிசாமி தரையிலேயே நீந்தியது அனைவருக்கும் தெரியும். ஜெயக்குமார் சசிகலாவுக்கு செக்யூரிட்டி போல நின்றாரே.

அமைச்சரவையில் இடம்

அமைச்சரவையில் இடம்

டெல்லியில் இருப்பவர்களுக்கு என்ன தெரியும்? யார் பொதுச் செயலாளர், யார் தலைமையில் அதிமுக செயல்படுகிறது என்பதில் எல்லாம் அவர்களுக்கு அக்கறை இல்லை. அங்கு இருப்பவர்களிடம் பேசி நீங்கள் பொதுச் செயலாளர் என போட்டு லெட்டர் அனுப்புங்கள் எனக் கேட்டு வாங்கி இருக்கிறார்கள். அதை வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அலைகிறார். ஏதாவது ஒரு அமைச்சரவையில் ஒரு இடம் வேண்டும் என்று அலைகிறார். இந்த வயதில் எதற்கு அவருக்கு பதவி ஆசை?

மோடி ஸ்ட்ராங்கா இருக்காரு

மோடி ஸ்ட்ராங்கா இருக்காரு

அது ஆகாது தம்பி.. பிரதமர் மோடி ஸ்ட்ராங்கா இருக்காரு.. அவர் உங்களுக்கு ஒண்ணும் பண்ண மாட்டாரு.. அதில் நம்பிக்கை இருக்கு. அவரும் சரி, எந்தக் கட்சியும் சரி விசுவாசத்திற்குப் பாத்திரமானவர் என ஒருவருடன் கூட்டணி பேசினால் அது ஓ.பன்னீர்செல்வமாக இருக்குமே தவிர, இந்த துரோகியோடு யாரும் கூட்டணி பேசமாட்டார்கள். பாமக ஓடிவிட்டது, தேமுதிக பட்டாசு வெடித்து ஐயோ சாமி வேண்டாம் என ஓடிவிட்டார்கள். கமல்ஹாசனும் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணிக்குப் போகிறார்.

லாயக்கு இல்லை

லாயக்கு இல்லை

எடப்பாடியால் தொடர் தோல்விகள் தான். பேரூராட்சி பூஜ்யம், நகராட்சி பூஜ்யம், மாநகராட்சி பூஜ்யம். அதனால் தான் பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்னார். ஓட்டுநர் சரி இல்லை, இது விபத்தில் போய்த்தான் முடியும், இந்தக் கட்சியை நடத்த நீ லாயக்கு இல்லை பழனிசாமி, ஒதுங்கிக்கொள்ளுப்பா என்று சொல்கிறார். ஆனால், பெரிய விபத்தை ஏற்படுத்தி விட்டுத்தான் போவேன் என்று உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி அனைத்து நிர்வாகிகளும் தயாராக இருக்கிறோம். பூத் கமிட்டிகளை அமைத்து வருகிறோம். பழனிசாமியை ஒதுக்கி தூர வைத்துவிட்டு ஓபிஎஸ் தலைமையில் மாபெரும் வெற்றியைக் கண்டடைவோம்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+