சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆரம்பிச்சிருச்சாம் பண மழை.. அது 5000 கொடுத்தா.. இது 10,000 தருதாம்.. தடதடக்கும் இடை தேர்தல் களம்!

அதிமுக, திமுக பணப்பட்டுவாடா செய்வதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    விக்கிரவாண்டியில் ஆரம்பிச்சிருச்சாம் பண மழை | Vikkiravandi ByElection

    சென்னை: வேலூர் தொகுதியில் பண மழை பொழிந்ததைக் காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்து மீண்டும் நடத்தினார்கள். தற்போது 2 தொகுதி இடைத்தேர்தலிலும் அப்படி ஒரு நிலைமை வந்துவிடும் போல உள்ளது!

    ரொம்ப நாளாக நடத்தாமல் இருந்து இப்போதுதான், விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளிலும் தேர்தல் நடக்க போகிறது. இந்த 2 தொகுதி தேர்தலுக்கும் எப்போதும் போல் இல்லாமல், அதிமுகவும், திமுகவும் படு மும்முரமாக இறங்கி வேலை செய்து கொண்டிருக்கின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே இரு கட்சிகளும் மின்னல் வேகத்தில் இறங்கி விட்டன.

    யார் இந்த தொகுதிகளில் வெற்றி பெறுகிறார்களோ, அதை வைத்தே உள்ளாட்சி தேர்தல், வரப்போகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்றும், அதற்கு இந்த இரு தொகுதிகளின் வெற்றி ஒரு அச்சாரமாகவும் பார்க்கப்படுகிறது. அதனால்தான் இரு தரப்புமே களத்தில் குதித்துள்ளது. வேட்பாளர்களை அறிவித்த கையோடு வேலைகளையும் முடுக்கி விட்டுள்ளனர்.

    அரசியல்வாதிகள் போன் ஒட்டுக்கேட்பு.. மாஜி பெங்களூர் போலீஸ் கமிஷனர் அலோக் குமார் வீட்டில் சிபிஐ ரெய்டுஅரசியல்வாதிகள் போன் ஒட்டுக்கேட்பு.. மாஜி பெங்களூர் போலீஸ் கமிஷனர் அலோக் குமார் வீட்டில் சிபிஐ ரெய்டு

    தீவிரம்

    தீவிரம்

    போன முறை எம்பி தேர்தலில்தான் வெற்றி பெற முடிந்தது, சட்டமன்ற தேர்தலில் போதிய வெற்றியை அள்ள முடியவில்லை என்பதால் திமுக தீவிரம் காட்டுகிறது. வேலூரை இழந்துவிட்டதால், விட்டதை பிடிக்க அதிமுகவும் தீவிரம் காட்டுகிறது. அது மட்டுமில்லை, 2 தொகுதியுமே திமுக கூட்டணி வசம் உள்ளதால், அதில் ஒன்று கிடைத்தாலும் தனக்கு வெற்றியே என்று அதிமுக நினைக்கிறது.

    ரூ.50 கோடி

    ரூ.50 கோடி

    இப்படி ஒரு நிர்ப்பந்தம் காரணமாகவே, விக்கிரவாண்டியில் கரன்சிகளை இறக்க போவதாகவும், இதற்காகவே 50 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டுள்ளதாகவும்கூட யூகமான செய்திகள் வலம்வந்தன. தேனி பார்முலாவையே இந்த தேர்தலில் அதிமுக கையில் எடுக்கும்போது, திமுகவும் அதே பாணியை பின்பற்ற போவதாகவும் தெரிகிறது.

    பண மழை

    பண மழை

    விக்கிரவாண்டி தொகுதியில் பூத் கமிட்டிக்கு முதல் ரவுண்டில் எதிர்க்கட்சி ரூ.5000, அடுத்த ரவுண்டில் ரூ.10,000 என்றும், ஆனால் விடுமா ஆளுங்கட்சி.. முதல் ரவுண்டிலேயே ரூ.10,000 வழங்க போவதாகவும் செய்திகள் இப்போதே கசிய தொடங்கிவிட்டன. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று நமக்கு உறுதியாக தெரியாது.

    ஆவணம் இல்லை

    ஆவணம் இல்லை

    கட்சிகளுக்குள் என்னதான் அன்டர்கிரவுண்ட் வேலை பார்த்தாலும், பணம் பட்டுவாடா புழக்கத்தை தேர்தல் ஆணையம் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கொண்டு, நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் சில கட்சிகளில் வேட்பாளர்களே அறிவிக்காத நிலையில், அதற்குள் ஒன்றரை லட்சம் ரூபாயை அதிகாரிகள் உரிய ஆவணம் இல்லாததால் கைப்பற்றி உள்ளனர்.

    இன்ப அதிர்ச்சி

    இன்ப அதிர்ச்சி

    இன்னும் தேர்தல் நாளுக்குள் எவ்வளவு பிடிபடுமோ, யார் யார் மாட்ட போகிறார்களோ தெரியாது. நிர்ப்பந்தம், மானப்பிரச்சனை, வருங்கால அரசியல் நிலை இதெல்லாம் கணக்கில் கொண்டு கரன்சிகளை இரு கட்சிகளும் இறக்க போய்.. கடைசியில் ஆர்கே நகர், வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தானது போல நிலைமையை கொண்டு வந்து விடுவார்களா என்ற கலக்கமும் எழுந்துள்ளது. எப்படி பார்த்தாலும் சரி.. இரு தொகுதி மக்களுக்கு ஜாக்பாட் அடிக்க போகிறது என்று மட்டும் தெரிகிறது.

    English summary
    It is said that the AIADMK and DMK will distribute money in both the constituencies Vikkiravandi and Nanguneri
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X