சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முடிஞ்சளவு அள்ளிப்போடும் அதிமுக.. எகிறும் சிறிய கட்சிகளின் ஆதரவு.. லிஸ்ட் பார்டர் தாண்டுதே!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கூட்டணிக்கு இதுவரை கிட்டத்தட்ட 15 சிறிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துவிட்டது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்று கட்சிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.

இன்று இரவுக்குள் அனைத்து கூட்டணி பேச்சுவார்த்தைகளும், தொகுதிப் பங்கீடு அதகளங்களும் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 வரவேற்கும் அதிமுக

வரவேற்கும் அதிமுக

திமுகவைப் பொறுத்தவரை ஏறக்குறைய கூட்டணி கணக்கை முடித்து கேட்டை அப்படி இப்படி என மெதுவாக மூடிக் கொண்டிருக்கிறது எனலாம். ஆனால், அதிமுக முடிந்த அளவுக்கு வலிமையான கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதில் முனைப்போடு உள்ளது. அதற்கு முக்கியம் திமுக அச்சுறுத்தல் தான்.

 அதிமுக உஷார்

அதிமுக உஷார்

ஆம்! எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அலை திமுக பக்கம் வீசுவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுவரை வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகள், திமுகவுக்கே ஆட்சி என்று தெரிவிக்கின்றன. இவற்றை அதிமுக பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், கட்சித் தலைமை பரவலாக அதிமுக நிர்வாகிகளை உஷார்படுத்தியுள்ளது.

 திமுகவை சமாளிக்க

திமுகவை சமாளிக்க

குறிப்பாக, தேர்தல் களத்தில் அதிமுகவுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்காகவும் அதிகம் உழைக்க வேண்டும் என்று தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுகவை சமாளிக்க, முடிந்த அளவுக்கு சிறிய சிறிய கட்சிகளை சேர்த்துவிடுவது என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது அதிமுக.

 புதிய பேச்சுவார்த்தை

புதிய பேச்சுவார்த்தை

இதற்காக சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் தங்கியுள்ளனர். அதன்படி இன்று அந்த ஹோட்டலில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துடன் அமைச்சர் இருவரும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 நீளும் லிஸ்ட்

நீளும் லிஸ்ட்

ஏற்கனவே நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி என்.ஆர்.தனபாலன், மூவேந்தர் முன்னணி கழகம் ந.சேதுராமன், பசும்பொன் தேசிய கழகம் எம்.ஜோதி முத்துராமலிங்கம், பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி முருகன் ஜி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி கே.மணிகண்டன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் எஸ்.ஷேக் தாவூத், இந்தியத் தேசிய குடியரசு கட்சி சி.அம்பேத்கர் பிரியன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் இடிமுரசு இஸ்மாயில், தமிழக ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி எம்.எப்.தமீம், செங்குந்தர் அரசியல் அதிகாரம் சரவணவேல், இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் ஆகிய 13 கட்சிகளின் தலைவர்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்களைச் சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
small parties supports admk alliance - அதிமுக கூட்டணி
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X