தயாநிதி மாறன் ஒரே போடு.. "10 வருடமா தூங்கிட்டு இருந்தாங்களே.. இப்போ என்னாச்சு பாருங்க".. சுளீர்
தயாநிதி மாறன் திமுக அரசையும், முதல்வரையும் புகழ்ந்து பேட்டி தந்துள்ளார்
சென்னை: அதிமுக அரசு 10 வருடங்களாக தூங்கி கொண்டு இருந்தநிலையில், ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில், முதல்வர் முக ஸ்டாலின் மக்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று, எம்பி தயாநிதி மாறன் பெருமிதம் தெரிவித்தார்.
நுங்கம்பாக்கத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள நடைமேம்பால பணியினை திமுக எம்பி தயாநிதிமாறன் நேரில் ஆய்வு செய்தார்.. அப்போது அவருடன் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்பி தயாநிதிமாறன், "நுங்கம்பாக்கம் பகுதியில் நீண்ட நாட்களாக சாலையை கடப்பதற்காக நடைபாதை வேண்டும் என்று லயோலா கல்லூரி சார்பில் கோரிக்கை விடுத்தபடி இருந்தனர்..

பாலம்
அதேபோல, பொதுமக்கள் சார்பிலும் நீண்ட ஆண்டுகளாக இதே வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இவர்களின் கோரிக்கைக்காக, மாநகராட்சியை சந்தித்து நிரந்தர தீர்வு காண அணுகினோம்.. இப்போது, இந்த நடைபாதை பலத்தை சுமார் ஆறரை கோடி ரூபாயில் கட்டி முடித்துள்ளோம்.. அநேகமாக, இந்த மாத இறுதிக்குள் ஆணையர், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பார் என்று நம்புகிறோம்.. இதுபோன்று மக்கள் பிரச்சனைகளை போக்கும்வகையில் ஸ்டாலினின் திமுக ஆட்சி தொடர்ந்து செயல்படும்..

நுங்கம்பாக்கம்
இந்த நுங்கம்பாக்கம் பகுதியை எடுத்து கொண்டால், போக்குவரத்து நெரிசல் காரணமாக, சாலையை கடப்பதற்கே மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.. ஆனால், இந்த பாலம் திறந்துவிட்டால், மிகவும் பயன்தரத்தக்க வகையில் இருக்கும். அதேபோல, இந்த பகுதியில் சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்த முடியாத அளவிற்கு, சிசிடிவியும் மக்களின் பாதுகாப்பிற்கும் ஏற்றவகையில் பொருத்தப்படும்.. இந்த அதிமுக அரசு 10 வருடங்களாக தூங்கி கொண்டு இருந்தது.. 10 வருடங்களாக10 நகராட்சி மன்றமே நடக்கவில்லை..

ட்வீட் - போட்டோ
திமுக ஆட்சிக்கு வந்த ஆரம்பத்தில் 8 மாதங்கள் கொரோனாவை சமாளிக்கவே சரியாக இருந்தது.. மற்ற நாட்களில், முதல்வர் ஸ்டாலின், நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார்.. ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் தீவிரமாக பணிகளையும் இந்த அரசு செய்து கொண்டு இருக்கிறது என்றார். இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் தான் மேற்கொண்ட ஆய்வு குறித்த ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அத்துடன், ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.

மேயர் பிரியா
அந்த ட்வீட்டில் "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மூலதன நிதி மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6.42 கோடி மதிப்பீட்டில் சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு பகுதி, 110வது வார்டு நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில், அமைக்கப்பட்டு வரும் நடைமேம்பாலப் பணியினை ஆய்வு மேற்கொண்டபோது.. உடன் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி மேயர் பிரியா, ஆணையாளர் ககன்தீப்சிங், சென்னை மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளரும் பணிகள் நிலைக் குழுத்தலைவருமான சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் மதன்மோகன், கழகச் செயலாளர்கள் ஜெ.எஸ்.அகஸ்டின் பாபு, மா.பா.அன்புதுரை உள்ளிட்ட கழக முன்னணியினர்" என்று பதிவிட்டுள்ளார்.
-
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு












Click it and Unblock the Notifications