சம்மணம் போட்டு உட்கார்ந்து.. அப்படியே அச்சு அசல்.. "அவரே"தான்.. அசர வைத்த ஓபிஎஸ். மகன்!
எம்பி ரவீந்திரநாத் தியானம் செய்யும் வீடியோ வைரலாகிறது
சென்னை: கண்ணை இறுக்கமாக மூடி, சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு.. எம்பி ஓபி ரவீந்திரநாத் செய்த தியானம், அச்சு அசல் ஓபிஎஸ் போலவே இருந்தது.. பழனி மலையில் எம்பி சாமி தரிசனம் செய்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓபிஎஸ் வழியில் சென்ட்டிமென்ட்டாக தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றவர் ரவீந்திரநாத்.
ஆரம்பத்தில் இருந்தே பாஜகவுடன் இணக்கமான போக்கை ஓபிஎஸ்-ம் இவரும் கடைப்பிடித்து வருகின்றனர்.. ஒருகட்டத்தில், ஓபிஆர் மக்களவையில் பேசுவதை பார்க்கும்போது, இவர் பாஜகவா? அதிமுகவா? என்று கேட்கும் அளவுக்கு பாஜக தரப்பில் நெருக்கம் காட்டி வருபவர்.

குமார்
தன் பெயரை சில தினங்களுக்கு முன்பு "ப.ரவீந்திரநாத்" என்று மாற்றி கொண்டார். அதாவது இதுநாள் வரை பின்னாடி ஒட்டிக் கொண்டிருந்த "குமார்" ஆகிவிடவும், அது இப்போது ஒர்க் அவுட் ஆகி வருகிறது. இவருக்கு கடவுள் பக்தி அதிகம்.. சென்ட்டிமென்ட்டும் அதிகம்.

மாண்பு
சில மாதங்களுக்கு முன்பு ஜக்கி வாசதேவ் நடத்திய மஹா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டதுடன், அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.. "ஒரு எம்பி என்கிற மாண்பினை மறந்து இவர் ஏன் ஜக்கி காலில் விழணும்" என்று சர்ச்சைகளும் வெளிவந்தன.. இருந்தாலும், எம்பியின் பக்தியின் வெளிப்பாடு இது என்றே அவரது ஆதரவாளர்கள் கருதினர்.

பழனி கோயில்
இப்போதும், இவர் சாமி தரிசனம் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு ரவிந்திரநாத் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.. மலையடிவாரத்திலிருந்து வின்ச் மூலமாக மலைமீது சென்ற ரவீந்திரநாத், ராஜ அலங்காரத்தில் முருகனை தரிசனம் செய்தார்.

அரசியல்
சாமி தரிசனம் முடித்து வந்த ரவீந்திரநாத்தை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது, "கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருப்பதால் அரசியல் பேச விரும்பவில்லை" என்று சொல்லிவிட்டு, "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்தசஷ்டிகவசம் காக்கப்படும்" என 2 வார்த்தைகள் மட்டும் சொன்னார்.. பிறகு உடனே காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார்.

காவி வேட்டி
பழனி கோயிலுக்கு ரவீந்திரநாத், காவி வேட்டி அணிந்து வந்திருந்தார்.. முகத்தில் மாஸ்க் இருந்தது.. அங்கே சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு, இருகைகளையும் விரித்து வைத்து கொண்டு கண்ணை மூடி தியானம் செய்தார்... இதை பார்த்த அதிமுகவினர், அச்சு அசல் ஓபிஎஸ்ஸை பார்ப்பது போலவே இருப்பதாக பூரித்துபோய், அந்த தியானம் செய்யும் வீடியோவை ஷேர் செய்தும் வருகின்றனர்.












Click it and Unblock the Notifications