கொலை, போக்சோ வழக்குகள், குற்றச்செயல்...6 வழக்கறிஞர்களுக்கு தடை...பார்கவுன்சில் அதிரடி
கொலை, போக்சோ வழக்குகள், அதிக வட்டி வசூலித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆறு வழக்கறிஞர்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: அதிக வட்டி வசூலிப்பு, போக்சோ, கொலை வழக்கில் சிக்கிய 6 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டுக்குள்ளான 6 வழக்கறிஞர்களுக்கு தடை விதித்து பார் கவுன்சில் செயலாளர் ராஜகுமார் உத்தரவிட்டுள்ளார்.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம், செம்புலிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ்வர்ராஜ், சென்னை தியாகராயநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் ஆகியோர் எந்த நீதிமன்றங்களிலும் ஆஜராக கூடாது என தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்றிய சீதாராமன், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாகவும், அதிக வட்டிக்கு கடன் கொடுத்ததாகவும் உள்துறை கூடுதல் செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
போலி முத்திரை தாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த திருப்பூர் வழக்கறிஞர், ராஜேந்திரன், போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோவை வழக்கறிஞர் அசோக் மற்றும் கண்டக்டராக பணியாற்றியதை மறைத்து சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செய்த சென்னை மயிலாப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் ஆகியோருக்கும் தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் அவ்வப்போது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கம். கடந்த 2017ஆம் ஆண்டு முறையான சட்டப்படிப்பு படிக்காமல் வக்கீல் தொழில் செய்து வந்த 742 பேருக்கு தடை விதிக்கப்பட்டது. 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்காமல் வெளி மாநில திறந்தவெளி பல்கலைகழகங்களில் பட்டம் பெற்று சட்டம் பயில்வதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் 742 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.தொடர்ந்து அவர்கள் வக்கீல் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது'' என பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.
லெட்டர் பேடு பல்கலைக்கழகங்களில் சட்டப் பட்டத்தை விலைக்கு வாங்கி வந்து வக்கீல் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களை நீக்கிவிட்டு பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை தொடர்ந்து பார் கவுன்சில் கடந்த 2017ஆம் ஆண்டு நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. தற்போது கொலை, போக்சோ வழக்குகள், அதிக வட்டி வசூலித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆறு வழக்கறிஞர்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications