அமிதாப் மாமாவுக்கு கோபம் வந்துடுச்சு.. கண்டன அறிக்கையால் கலாய்க்கப்படும் ஓபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவை விமர்சித்து வீடியோ வெளியிட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதிலும் கூட அவர் பாஜகவை கண்டிக்காமல் விட்டதை குறிப்பிட்டு, அவரை சமூகவலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.

மதுரையில் கடந்த 22 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பாஜக நிர்வாகிகள், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது அரசியல் ரீதியாகவும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. திருப்பரங்குன்றம் மலை பிரச்னையை மையப்படுத்தி இந்த மாநாடு நடத்தப்பட்டது.

OPS O Panneerselvam

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். முக்கியமாக முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சிக்கும் வகையில் ஒரு வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

பாஜக மற்றும் இந்து முன்னணிக்கு திமுக மற்றும் பெரியார் ஆதரவாளர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மறுபக்கம் அதிமுக மீதும் விமர்சனம் எழுந்துள்ளது. அதிமுகவின் கொள்கைத் தலைவர்களான பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சிக்கும் வகையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அதன் முன்னாள் அமைச்சர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

OPS O Panneerselvam

இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க யாருமே இல்லையா என்று அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்க, இதோ நான் கேட்கிறேன் என்று முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்து முன்னணிக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பகுத்தறிவுச் சிந்தனைகளை பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் சென்று சமுதாயத்தில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் கொள்கைகளை, திராவிட சித்தாந்தத்தை முன்னிறுத்தி தேர்தலில் களம் கண்டு தமிழக அரசியலில் மிகப் பெரிய ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா.

தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கிய தந்தை பெரியார் மற்றும் அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்களை விமர்சித்து 'முருக பக்தர்கள்' மாநாடு என்ற போர்வையில் இந்து முன்னணி வீடியோ வெளியிட்டது கடும் கண்டனத்துக்குரியது." என்று கூறியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் இந்து முன்னணிக்கு கண்டனம் தெரிவித்தாலும் பாஜகவுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

OPS O Panneerselvam

இதையடுத்து அவரின் அறிக்கையை டிகோட் செய்து வருகிறார்கள். 'DESPOTER' என்பவரின் எக்ஸ் தளத்தில், "ஓபிஎஸ் ஒன்றும் சும்மா இல்ல. கண்டனம் யாருக்கு பார்த்தியா. இந்து முன்னணிக்கு தான். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு இல்ல." என்று கூறியுள்ளார். இன்னும் சிலர், "கோமால இருந்து வந்துவிட்டீர்களா", "இல்ல புரியல நானும் இருக்கேன்னு காட்ட முயற்சி பண்றீங்களா சார்".

"அந்த பக்கமும் இல்லாம.. இந்த பக்கமும் இல்லாம ஒரு உருட்டு", "நீங்க எந்த கட்சி உறுப்பினர்", "ஓ மை காட் ஆளுமைக்கு கோபம் வந்துவிட்டது. இனிமேல் மோடி, ஷா அன்கிள் எவருமே எதிரில் வர முடியாது", "இன்று தேனி முழுவதும் கனமழை பெய்யும்", "மிக்சர் தீர்ந்துவிட்டதா இல்லை உங்களை அந்தக் கூட்டணியில் கழற்றிவிட்டுவிட்டார்களா." என்றும் கமென்ட் செய்து வருகிறார்கள்.

இன்னும் சிலர் கலகலப்பு படத்தில் பிரபலமான, "எங்க அமிதாப் மாமாவுக்கு கோபம் வந்துடுச்சு" டெம்ப்ளேட் மற்றும் வடிவேலு டெம்ப்ளேட்டுடன் பன்னீர்செல்வத்தை கலாய்த்து வருகிறார்கள். மேலும் திமுக மற்றும் பெரியார் ஆதரவாளர்கள், "பாஜகவின் அங்கமாகவே இருந்த ஓபிஎஸ்ஸே கண்டனம் தெரிவித்துவிட்டார். நீங்க எப்ப வாய் திறப்பீங்க." என்று அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமியை டேக் செய்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதேநேரத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். "கண்டிச்சுட்டு போங்க. உங்க நெற்றில எதுக்கு பொட்டு வைக்கறீங்க. இனிமேல் இந்து கோயில்களுக்கு நீங்கள் வரக் கூடாது." என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+