முஸ்தபா மதுரை கோயிலுக்குள் போனாரே? துரைமுருகனை பாராட்டிய எச்.ராஜா.. ஆனால் ஸ்டாலினுக்கு ட்விஸ்ட்! ஏன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் வேத மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றதற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், புதுக்கோட்டை லிங்கமலை விவகாரம், தமிழகத்தில் இந்துக்களின் வழிபாட்டு உரிமைகள், விஜய் அரசின் செயல்பாடுகள் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். துரைமுருகனுக்கு எச்.ராஜா தெரிவித்த பாராட்டுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் விமர்சனம் என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மலம்பட்டி கிராமத்தில் லிங்கமலை அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் சிலுவை வைக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடத்த முயற்சிகள் நடைபெறுவதாகவும் இந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

H Raja Controversy Tamil Nadu Politics DMK vs BJP

லிங்கமலையில் சிலுவை

மேலும், லிங்கமலை என்ற பெயரை சவேரியார் மலை என மாற்ற முயற்சி நடைபெறுவதாகவும் புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இந்து முன்னணி புகார் மனுவும் அளித்துள்ளது. மலையின் தொன்மையையும் வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும், மத மோதலைத் தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

நயினார் நாகேந்திரன் கண்டனம்

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார்.. திருப்பரங்குன்றத்தைத் தொடர்ந்து லிங்கமலையும் குறிவைக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய நயினார், சிலுவை அருகே ஜெபம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களையும், இதைத் தட்டிக்கேட்ட இந்து பக்தர் மாரிமுத்து தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களையும் கண்டித்திருக்கிறார்.

எச்.ராஜா கண்டனம்

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும், ஆட்சி நிர்வாகமும் மிகவும் மோசமாகிவிட்டது.. விஜயதசமி அன்று குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது இந்த நாட்டின் பண்பாடு, கலாச்சாரம்.. ஆனால் அதற்குத் தடங்கல் ஏற்படுத்துகிறார்கள்..

மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா, முஸ்லிம் அடையாளத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் சென்றிருக்கிறார்.,. இந்துக்களை அடிமைப்படுத்திவிட்டோம் என தமிழகத்தில் சில ஆளுங்கட்சி தலைவர்கள் குறிப்பால் உணர்த்துகிறார்கள்.. இந்து மதத்தை அழித்துவிட்டோம் என இந்த அரசு நினைக்குமானால், அது தவறு.. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

முதலமைச்சர், சபாநாயகர், நிதி அமைச்சர் ஆகியோர் கிறிஸ்துவர்களாக இருப்பதால், தமிழகத்தையே கிறிஸ்தவமயமாக்கிவிட்டதாக சிலர் கருதுகின்றனர். இது மதச்சார்பற்ற அரசு என்பதை நிரூபிக்க வேண்டும். இந்துக்களின் பழக்கவழக்கங்களில், வழிபாட்டு உரிமைகளில் அரசு தலையிடக்கூடாது" என்றார் மூத்த தலைவர் எச்.ராஜா..

வேலூர் பேட்டி

முன்னதாக வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா, தமிழக அரசின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

"வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் முறைகேடு என்றால் புகார் செய்ய வேண்டியது தானே? ஆனால் ஒருவர் கூட புகார் செய்யவில்லை. காரணம் இத்தாலியை பூர்வீகமாக கொண்டு ராகுல் காந்தி தான் பங்களாதேஷ் இஸ்லாமியர்களை இந்தியாவில் குடியுரிமைக்காக எப்படி அனுமதிக்க முடியும்? அது தேச துரோகம்.

தமிழகத்தில் நிர்வாக கேடு, விலைவாசி உயர்வு உள்ளது. நிர்வாக சீர்கேடு உள்ள ஆட்சியாக ஜோசப் விஜய்யின் ஆட்சி உள்ளது. சட்டம் ஒழுங்கும் மிகமோசமாக உள்ளது... விஜய் வண்டியில் ஏறி கை அசைக்கலாம். ஆனால் ஒரே வீட்டில் 4 பேர் கொல்லப்பட்டது. தமிழக அரசு சரியான முறையில் செயல்படவில்லை. தமிழகத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் கடந்த திமுக ஆட்சியைப் போலவே உள்ளது. ஒரு மாற்றமும் இல்லை.

துரைமுருகனுக்கு பாராட்டுக்கள்

வரும் விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்க தடை விதிக்கப்படுகிறது. இந்த தவெக ஆட்சியில் பதவியில் உள்ளவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள்... இது செக்குலர் அரசாங்கம். நம் இந்து பழக்க வழக்கங்களில் தலையிட கூடாது. தமிழகத்தில் ஆளுங்கட்சி இந்துக்களை அடிமைப்படுத்திவிட்டோம் என்று உணர வைத்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்து கோவில்களுக்குள் சென்றால் இந்து அடையாளங்களை இட்டுகொண்டு தான் கோவிலுக்கு செல்ல வேண்டும். இந்து மதத்தினை அழித்துவிட்டோம் என்று சொல்ல கூடாது.

திமுக பொதுச்செயலாளர் இல்ல திருமண விழாவில் வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடந்துள்ளது. இது புதிதல்ல... திமுகவில் உள்ள தலைவர்கள் அவர்கள் வீட்டில் இந்து முறைப்படி நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்கள். பிறகு ஸ்டாலினை அழைத்து வந்து ஷோ காட்டுவது என்பது பழக்கம் தான்.

ஓட்டுக்கு பயந்து இந்து வேஷம் போட்டாலும் சரி, அல்லது உள் மனதில் இருந்து இந்து வேஷம் போட்டாலும் சரி துரைமுருகனுக்கு எனது பாராட்டுக்கள்" என்றார் எச்.ராஜா..!!

திமுக - பாஜக

ஆக, துரைமுருகன் இல்லத் திருமணத்தில் வேத மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றதை வரவேற்ற எச்.ராஜா, அதேநேரத்தில் திமுகவின் அரசியல் அணுகுமுறையையும் விமர்சித்துள்ளார். இந்து மதம், இந்துக்களின் வழிபாட்டு உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் திமுகவும் பாஜகவும் தொடர்ந்து எதிரெதிர் கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில், துரைமுருகன் இல்லத் திருமணத்தையும் அந்த அரசியல் விவாதத்துடன் இணைத்து பேசியிருக்கிறார் மூத்த தலைவர் எச்.ராஜா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+