தமிழன் என்று சொன்னது ஏன்... என் ரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது... ராகுல் காந்தி உணர்ச்சிமிகு பேச்சு

என்னுடைய ரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது. நான் தமிழனாக உணர்கிறேன் என்று ராகுல்காந்தி உணர்ச்சி பெருக்குடன் கூறினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் ஏன் தமிழ்நாட்டைப்பற்றி பேசினேன்... நானும் தமிழன்தான் என்று என்னை அறியாமல் சொன்னேன் என்று கூறிய ராகுல்காந்தி... என்னுடைய ரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது என்று உணர்ச்சி பெருக்குடன் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ராகுல்காந்தி, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

முதலில் சிரிப்புடன் தனது பேச்சை தொடங்கினார் ராகுல்காந்தி, அண்ணன் மு.க ஸ்டாலின் அவர்களை பாராட்ட விரும்புகிறேன். இதுபோன்ற அற்புதமான புத்தகத்தை அளித்துள்ளார். அவருடைய வாழ்க்கை மிக நீண்ட போராட்டத்தைக் கொண்டது. மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இந்த இடத்திற்கு ஸ்டாலின் வந்துள்ளார்.

நேற்றைய தினம் எனது தாயார் நாளை மு.க ஸ்டாலினுக்கு பிறந்தநாள். 69 வயது என்று நான் சொன்ன உடன் சாத்தியமே இல்லை என்று சொன்னார். 50 அல்லது 60 வயதுதான் இருக்கும் என்று இருக்கிறார். இளமையானவர். கூகுள் போய் சென்று தேடிப்பார்த்தார். ஆம் சொன்னது சரிதான் என்று சோனியாகாந்தி ஒப்புக்கொண்டார்.
எப்படி இத்தனை இளமையாக இருக்கிறார். நான் எப்படி இருக்கிறேன் என்று எழுத வேண்டும் என்று ராகுல்காந்தி சொன்னார். தமிழ்நாட்டிற்கு வருவது எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது என்று சொன்னார் ராகுல்காந்தி.

தமிழன் என்று சொன்னேன்

தமிழன் என்று சொன்னேன்

சில நாட்களுக்கு முன்பு நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை தமிழகம் மிகப்பெரிய அளவில் பாராட்டியது. நான் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்த போது தமிழ்நாடு பற்றி குறிப்பிட்டீர்கள் என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். தமிழகத்தின் மீது எனக்கு அன்பிருக்கிறது. நான் பலமுறை அதை உணர்ந்திருக்கிறேன் என்று சொன்னார்.

ஏன் அப்படி சொன்னேன்

ஏன் அப்படி சொன்னேன்

என்னை அறியாமல் நான் தமிழ் என்ற வார்த்தை வந்தது. நான் காரில் ஏரிய பின்னர் ஏன் அப்படி சொன்னேன் என்று யோசித்தேன். நீங்கள் தமிழகத்தில் பிறக்கவில்லை. நீங்கள் தமிழ் மொழியை பேசவில்லை. 3 ஆயிரம் ஆண்டு பழமையான மொழி தமிழ் மொழியை நான் அறிந்திருக்கவில்லை. அப்படி இருக்கும் போது எப்படி நான் தமிழர் என்று சொன்னேன். அந்த உரிமையை எடுத்துக்கொண்டேன் என்று யோசித்தேன்.

என் ரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது

என் ரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது

நான் அதைப்பற்றியே யோசித்தேன்... வீட்டிற்கு போகும் போது பலமுறை அதைப்பற்றியே நினைத்துக்கொண்டு போனேன். பின்னர் நான் அதை உணர்ந்தேன். ஏனென்றால் என் ரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது என்று சொன்ன போது ராகுல்காந்தியின் குரல் தழுதழுத்தது.

வேதனையான தருணம்

வேதனையான தருணம்

ஒரு தந்தையை இழப்பது வேதனையான தருணம். நான் அந்த சோகத்தை திரும்ப திரும்ப எண்ணிப்பார்க்கிறேன்.
என்னை தமிழன் என்று அழைத்துக்கொள்வதற்கான எல்லா உரிமையும் இருப்பதாக நான் என்னை உணர்ந்தேன் என்று ராகுல்காந்தி கூறினார். நான் இங்கு வரும் போது பணிவோடு வருகிறேன். வரலாற்றுக்கு பாரம்பரியத்திற்கு தலை வணங்குகிறேன் என்றும் சொன்னார் ராகுல்காந்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+