அப்பா அனுபவிக்கிற சோதனைகளை பார்த்தா மனசு வலிக்குது.. “ஆனா ஒண்ணு சொல்றேன்”.. ஜெயபிரதீப் உருக்கம்!
சென்னை : அதிமுக தவறான வழியில் சென்றுவிடக்கூடாது என்பதற்காக எந்த அளவுக்கு எனது அப்பா சோதனைகளை எதிர்கொள்கிறார் என்பதை பார்க்கும்பொழுது மகனாக என்னுடைய மனம் மிகவும் வேதனைப்படுகிறது என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நிலவி வரும் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி மோதலைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இதற்கிடையே, ஓபிஎஸ் வகிக்கும் அத்தனை பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையிலும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராகவே தொடர்கிறார் ஓபிஎஸ்.
ஓ.பன்னீர்செல்வம் திமுகவோடு கூட்டு சேர்ந்துகொண்டு அதிமுகவை அழிக்க நினைப்பதாக எடப்பாடி தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக ஓபிஎஸ்ஸின் இளைய மகன் ஜெயபிரதீப் அறிக்கை விடுத்துள்ளார்.

எந்த ஒரு பொறுப்பையும்
விபி ஜெயபிரதீப் விடுத்துள்ள அறிக்கையில், "தங்கத் தாரகை புரட்சித் தலைவி ஜெயலலிதா வழிநடத்திய ராணுவக் கட்டுப்பாட்டு உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களின் விசுவாசமிக்க முதன்மைத் தொண்டராக தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் அங்கீகரித்தார்கள். கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஜெயலலிதா நூற்றுக்கணக்கான பொறுப்புகளை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் எந்த ஒரு பொறுப்பையும் சரியாகச் செய்யவில்லை என்று திரும்பப் பெற்றதாக வரலாறு கிடையாது.

சூழ்ச்சிகளும் வஞ்சகமும்
எங்கள் தர்மத்தாய்க்கு பிறகு அவருடைய திறமையை யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. சூழ்ச்சிகளும் வஞ்சகமும் பொய் பிரச்சாரங்களையும் ஈடுபடுத்தி தன்னெழுச்சியாக அவருக்கு கிடைத்த மக்கள் செல்வாக்கை குறைப்பதற்கு அனைத்து தவறான வழிகளையும் செயல்படுத்தி வருகிறார்கள் என்பது மிகவும் வருத்தத்தக்கது.

கரும்புள்ளி
பதவிக்காகவும் பணத்திற்காகவும் உண்மைக்கு புறம்பாக மனசாட்சி இல்லாமல் கழக உண்மை தொண்டனை வசை பாடுபவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தங்கள் தவறை உணர்ந்து மனம் வேதனைப்படுவதை காலம் உணர்த்தும். யாருடைய எதிர்கால நலனுக்காக போராடுகிறாரோ அவர்களே அவரை வசை பாடுவது கழக வரலாற்றின் கரும்புள்ளி.

தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்க்காமல்
தனக்கென்று எந்தக் கூட்டத்தையும் சேர்க்காமல் கழகத்தில் இருக்கும் அனைத்து தொண்டர்களையும் எந்த வேறுபாடும் காட்டாமல் ஒரே மாதிரி வழிநடத்தியதால் பல சோதனைகளை எதிர்கொண்டு கழகத்திற்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்துச் சென்றுள்ளார்.

எப்பேர்ப்பட்ட சோதனைகள் வந்தாலும்
தனது வாழ்க்கையில் அனைத்து பதவிகளையும் கடந்த 71 வயது உடைய ஒரு மனிதன் தன்னை வளர்த்துவிட்ட கழகம் தவறான வழியில் செல்லாமல் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கு சோதனைகளை எதிர்கொள்கிறார் என்பதை பார்க்கும்பொழுது மகனாக என்னுடைய மனம் மிகவும் வேதனைப் பட்டாலும் கழக அடிமட்ட தொண்டனாக வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட சோதனைகள் வந்தாலும் கழக நன்மைக்காக கடைசி வரை போராடுவதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்ல தீர்ப்பு கிடைக்கும்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மாவும், இறைவனும் மக்களும் நல்லதொரு தீர்ப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்." என ஜெயபிரதீப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதிமுகவில் நிலவி வரும் குழப்பமான சூழலில் ஜெயபிரதீப்பின் இந்த அறிக்கை தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications