தொண்டை கொஞ்சம் சரியில்லை.. மெதுவாகத்தான் பேசுவேன்.. செய்தியாளர் சந்திப்பை கலகலப்பாக்கிய இபிஎஸ்
சென்னை: சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறினார். அப்போது அவர் பேட்டியளிக்கையில், தொண்டை கொஞ்சம் சரியில்லப்பா மெதுவாகத்தான் பேசுவேன் என்று பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது.
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.
எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி உள்ளிட்டோரும் ஆளுநரை சந்தித்து பேசினர்.

மெதுவாகத்தான் பேச முடியும்
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது, தொண்டை கொஞ்சம் சரியில்லை.. எனவே மெதுவாகத்தான் பேச முடியும். இருக்கிறத கொஞ்சம் மேனேஜ் பண்ணிக்க வேண்டியதுதான்.. என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டு தனது பேட்டியை தொடர்ந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக ஆளுநரிடம் புகார் அளித்தேன்.

பொம்மை முதல்வராக..
தமிழகத்தில் உளவுத்துறை செயல் இழந்து உள்ளது. உளவுத்துறை முன் கூட்டியே கண்டுபிடித்து இருந்தால் கோவை சம்பவத்தை தடுத்து இருக்கலாம். பொம்மை முதல்வராக மு.க ஸ்டாலின் இருக்கிறார். அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை திமுக அரசு பறித்துவிட்டது. நம்ம ஊரு சூப்பரு என்ற விளம்பர பேனர் வினியோகத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. 350 செலவு ஆகும் பேனருக்கு ரூ. 7,906 விலை நிர்ணயம் செய்து கணக்கு காட்டுகிறார்கள். மதுபானக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளது" என்றார்.

அனைத்துமே ஆதாரம் இல்லாதவை
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:- " ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த புகார்கள் அனைத்துமே ஆதாரம் இல்லாதவை. தமிழகத்தின் வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எடப்பாடி பழனிசாமி புளுகு மூட்டைகளின் பின்னால் ஒளிந்து கொண்டு இருக்கிறார்.

எல்லாம் ஒரு நாடகம்தான்
அதிமுக உள்கட்சி பூசலில் பாஜகவின் ஆதரவை பெறுவதற்காகத்தான் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்ததே ஒரு நாடகம்தான். தமிழகத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளது என்று பொய்யான தகவல்களை பரப்பி விடுகிறார். சட்டம் ஒழுங்கு குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு தார்மீக உரிமை இல்லை. தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது" என்றார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications