மயிலாப்பூரில் ரோஸி.. ஓட்டல் அறை எண் 323-ல் கட்டிப்பிடித்த கார்த்திக்! கரெக்ட்டா வந்த சென்னை போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மயிலாப்பூர் ஸ்டார் ஓட்டலில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. யாரந்த இளைஞர்? போலீசார் அவரை ஏன் தேடி கொண்டிருக்கிறார்கள்?

கேரள மாநிலம் கொச்சின் பகுதியை சேர்ந்தவர் ரோஸி.. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 28 வயதான இவர் மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்... அதேபோல, ஒரு சேனலில் நேர்காணல் நிகழ்ச்சியை நடத்திவருபவர் கார்த்திக். ரோஸிக்கு மாடலிங் நிகழ்ச்சி மூலம் கார்த்திக் அறிமுகமானார். இதனால் ரோஸியிடம் செல்போன் நம்பர் வாங்கி வைத்திருந்தார் கார்த்திக்..

Mylapore Star Hotel and Do you know why did Modeling Girl go to Chennai Royapettah Police Station

இந்நிலையில், கடந்த 12ம் தேதி ரோஸிக்கு கார்த்திக் போன் செய்து, லண்டனில் பெரிய அளவிலான மாடலிங் போட்டி நடக்கிறது. இந்த போட்டிக்கு, உன்னைதான் சிபாரிசு செய்ய போகிறேன்.. இந்த போட்டியில் நீ பங்கேற்க வேண்டும் என்றால், இன்டர்வியூவில் கலந்து கொள்ள வேண்டும்.. உனக்கு இதில் விருப்பமா? என்று கேட்டிருக்கிறார்.

மகிழ்ச்சி: இதற்கு ரோஸி, லண்டனில் மாடலிங் நிகழ்ச்சி என்றதுமே மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்.. அதுதானே தன்னுடைய வாழ்நாள் லட்சியம் என்று சொல்லிய ரோஸி, கட்டாயமாக இன்டர்வியூவில் பங்கேற்பதாக சொன்னார்.

அதற்கு கார்த்திக், அப்படியானால், சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு வந்துவிடுமாறு சொல்லியிருக்கிறார். ரோஸியும், கார்த்திக் சொன்ன அந்த ஸ்டார் ஹோட்டலுக்கு வந்துசேர்ந்தார்.. ஹோட்டலின் ரிசப்ஷனிலிருந்து கார்த்திக்குக்கு போனை போட்ட ரோஸி, "எங்கே வரவேண்டும்? இன்டர்வியூ எங்கே நடக்கிறது?" என்று கேட்டுள்ளார்.

ரூம் நம்பர் 323: அதற்கு கார்த்திக், "ரூம் நம்பர் 323க்கு வா" என்று சொல்லியிருக்கிறார்.. ரோஸியும் அதன்படியே அந்த ரூம் நம்பருக்கு சென்றார்.. அங்கே நுழைந்ததும்தான் தெரியவந்தது, நேர்காணல் நடப்பதற்கான ஒரு அறிகுறியும் இல்லை..

எனவே, இதுகுறித்து கார்த்திக்கிடம் ரோஸி கேட்டதற்கு, "இன்டர்வியூ செய்யும் நபர்கள் இனிமேல் தான் வருவார்கள். அதுவரை நாம் காத்திருக்கலாம்" என்றார்.. பிறகு, மாடலிங் தொடர்பாக கொஞ்ச நேரம் ரோஸியிடம் பேசினார் கார்த்திக்.. பிறகு அப்படியே மெல்ல மெல்ல பாலுணர்வை தூண்டும் வகையிலான பேச்சை ஆரம்பித்திருக்கிறார் கார்த்திக்..

இன்டர்வியூ: இன்டர்வியூ ஆரம்பிக்கும்வரை வேறுவழியின்றி இந்த பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார் ரோஸி.. அப்போது திடீரென கார்த்திக், பேசிக்கொண்டே ரோஸியை கட்டிப்பிடித்து முத்தம் தந்துவிட்டாராம்.. தொடர்ந்து பாலியல் தொந்தரவும் செய்துள்ளார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ரோஸி, கார்த்திக்கிடம் இருந்து தப்பி, அந்த ஓட்டலை விட்டு வெளியே ஓடிவந்திருக்கிறார்..

பிறகு சென்னையிலிருக்கும் தன்னுடைய நண்பர்களுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்லியிருக்கிறார். அவர்களும், உடனடியாக ராயப்பேட்டை போலீசில் புகார் தருமாறு ஆலோசனை தந்துள்ளனர்.

ராயப்பேட்டை: இதையடுத்து, அன்றைய இரவே ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார் ரோஸி.. தன்னை நேர்காணல் என்ற பெயரில், ஓட்டலுக்கு அழைத்து பாலியல் தொல்லை தந்த கார்த்திக் மீது புகார் தந்தார். இந்த புகாரின்பேரில் போலீசாரும், அந்த ஸ்டார் ஓட்டலுக்கு விரைந்து வந்தனர்.. அங்கிருந்த சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர்.

அப்போதுதான், கார்த்திக் சொன்ன ரூம் நம்பர் 323-க்கு ரோஸி நுழைவதும், பிறகு சிறிது நேரத்தில் பதறியடித்துக் கொண்டு, அந்த ரூமிலிருந்து அவர் வெளியே ஓடி வருவதும் பதிவாகியிருந்ததை போலீசாரின் ஆய்வில் தெரியவந்தது.

எங்கே அவர்: இறுதியில், ராயப்பேட்டை போலீசார் கார்த்திக் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், ரோஸி அந்த ரூமை விட்டு வெளியே ஓடிவந்ததுமே, கார்த்திக் எஸ்கேப் ஆகியிருக்கிறார். அவரை இப்போது போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.. கேரள இளம்பெண்ணை இன்டர்வியூ என்ற பெயரில் சென்னைக்கு அழைத்து வந்து, பாலியல் தொல்லை தந்த அந்த கார்த்தி யார்?? எங்கே இருக்கிறார்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+